Connect with us
bala

Cinema History

கமல், இளையராஜா சொல்லியும் நடிகையிடம் டெரர் காட்டிய பாலா!.. அவர் அப்பவே அப்படித்தானாம்!..

தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகளை ஹேண்டில் பண்ணும் விஷயத்தில் டெரர் இயக்குனராக பார்க்கப்படுபவர் இயக்குனர் பாலா. பாலுமகேந்திராவின் சிஷ்யரான இவர் சேது திரைப்படம் மூலம் இயக்குனராக ரசிகர்களிடம் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களை அதிர வைத்த இயக்குனர் இவர்.

பல வருடங்களாக போராடிய விக்ரமுக்கும் இப்படம் நல்ல பேரை வாங்கி கொடுத்தது. இப்படத்திற்கு பின் நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், தாரை தப்பட்டை உள்ளிட்ட சில படங்களை பாலா இயக்கினார். பிதாமகன் படத்திற்காக விக்ரம் தேசிய விருதை பெற்றார். நான் கடவுள் படத்திற்காக பாலா தேசிய விருதை பெற்றார்.

இதையும் படிங்க: என் நாயகிகள் மீது பொசசிவ்னஸ் எனக்கு ஜாஸ்தி… விடவே மாட்டேன் அவங்கள… இயக்குனர் பாலா

சூர்யா நடிக்க பாலாவின் இயக்கத்தில் வணங்கான் படம் உருவானது. ஆனால், சில காரணங்களால் அப்படத்திலிருந்து சூர்யா விலக இப்போது அருண் விஜய் இப்படத்தில் நடித்து வருகிறார். பாலா என்றாலே அவர் நான் கடவுள் படம் உருவான போது அஜித்திடம் மோதியதுதான் எல்லோரும் நினைக்கு வரும்.

அந்த அளவுக்கு அது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், பாலா உதவி இயக்குனராக இருந்தபோதே அப்படித்தானாம். கமல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி பரதன் இயக்கி 1992ம் வருடம் வெளியான திரைப்படம் தேவர் மகன். இப்படத்தில் சிவாஜி, ரேவதி, கவுதமி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

தமிழ் சினிமாவில் தேவர் மகன் ஒரு முக்கிய படமாக இப்போதும் பேசப்படுகிறது. இந்த படம் ஏற்படுத்திய பாதிப்பில்தான் மாரிசெல்வராஜ் தேவர் மகன் படத்தையே எடுத்தார். சமூகவலைத்தளங்களில் இது அதிகமாக விவாதிக்கப்பட்டது. தேவர்மகன் படத்தில் இஞ்சி இடுப்பழகா என்கிற பாடல் வரும்.

இதையும் படிங்க: உண்மையிலேயே நடிகையர் திலகம் 2 தான்! கதைக்காக ஒரு வார காலம் எங்க இருக்காங்க தெரியுமா?

இந்த பாடல் உருவானபோது சில வரிகளை ரேவதி பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்த கமலும் இளையராஜாவும் அவரை அழைத்துள்ளனர். அப்போது பாலுமகேந்திரா இயக்கத்தில் ரேவதி ‘மறுபடியும்’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். எனவே, உதவி இயக்குனராக இருந்த பாலாவிடம் ‘ஒருமணி நேரம் கொடுங்கள் நான் போய்விட்டு வந்துவிடுகிறேன்’ என ரேவதி கெஞ்சி கேட்டும் பாலா அவரை அனுமதிக்கவே இல்லையாம்.

அதன்பின் தேவர் மகன் படத்தை பார்த்த பாலா ரேவதியிடம் ‘நீங்கள் இரண்டு வரி பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்’ என சொல்ல, ‘நீங்கள்தான் என்னை அனுப்பவே இல்லையே’ என செல்லமாக கோபித்துக்கொண்டாராம் ரேவதி.

இதையும் படிங்க: காரி துப்ப போறேன்.. அனகோண்டாவுக்கு ஒண்ணும் ஆகல.. ரிது வர்மாவிடம் நடிகர் விஷால் ஆபாச பேச்சு!

google news
Continue Reading

More in Cinema History

To Top