விஜயகாந்த் மகனை வைத்து ஒரு படம்!.. சசிக்குமார் கொடுத்த சூப்பர் அப்டேட்!…

Published on: November 29, 2024
shanmuga
---Advertisement---

Shanmuga pandiyan: தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராகவும் எல்லோருக்கும் பிடித்து நடிகராகவும் இருந்தவர் விஜயகாந்த். மதுரையிலிருந்து சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து பல சினிமா நிறுவனங்களுக்கும் சென்று வாய்ப்பு கேட்டு அலைந்து, திரிந்து, பல அவமானங்களை சந்தித்து ஒரு வழியாக வாய்ப்பை பெற்றார்.

அப்படி நடித்தாலும் அந்த படங்கள் ஓடவில்லை. எஸ்.ஏ.சந்திரசேகரின் கண்ணில் பட்டதால் சட்டம் ஒரு இருட்டறை படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படம் ஹிட் அடிக்கவே தொடர்ந்து படங்களில் நடிக்க துவங்கினார் விஜயகாந்த். ஆனால், அப்போதிருந்த முன்னணி நடிகைகள் விஜயகாந்துடன் நடிக்க மறுத்தனர்.

Also Read

இதையும் படிங்க: என்னது! விடாமுயற்சியில த்ரிஷா இவ்வளவு நேரம்தான் வருவாங்களா?.. இதுக்கா இம்புட்டு அக்கப்போரு!..

எப்படியோ போராடித்தான் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் விஜயகாந்த். அவருடன் நடிக்கமாட்டேன் என சொன்ன எல்லா நடிகைகளும் ஒருகட்டத்தில் விஜயகாந்துடன் நடித்தனர். அதுதான் விஜயகாந்தின் வெற்றி. சினிமாவில் பல புதிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களை அறிமுகம் செய்து வைத்தார் விஜயகாந்த்.

இவரால் வாழ்ந்தவர்கள் பல பேர். ஒருபக்கம் பொதுமக்களுக்கும் தன்னால் முடிந்த எல்லா உதவிகளையும் எல்லா நேரமும் செய்தவர்தான் விஜயகாந்த். அதனால்தான் அவரின் இறுதி ஊர்வலத்தில் பல லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். மக்கள் அவரின் உடல்மீது மலர்மீது அஞ்சலி செலுத்தினார்கள்.

shanmuga

விஜயகாந்துக்கு பின் அவரின் இளைய மகன் விஜய பிரபாகரன் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். சகாப்தம் என்கிற படத்தில் அறிமுகமானார். அதன்பின் மதுர வீர்ன் என்கிற படத்திலும் நடித்தார். ஆனால், அவை வெற்றிப்படங்களாக அமையவில்லை. இப்போது படைத்தலைவன் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகரும், இயக்குனருமான சசிக்குமார் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘விஜயகாந்த் சார் இருக்கும்போதே சண்முக பண்டியனை வைத்து ஒரு படம் எடுத்து அவர் வர வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கலயேன்னு இப்பவும் வருத்தமா இருக்கு. கண்டிப்பா அவரை வச்சி ஒரு படம் இயக்குவேன்’ என சொல்லி இருக்கிறார்.

இதையும் படிங்க: பிரபல பாலிவுட் நடிகருடன் கிசுகிசுக்கப்படும் சமந்தா.. உண்மையா இருந்தா ஹேப்பி