இயக்குனர்னா இதெல்லாம் தெரிஞ்சிருக்கணுமாம்… லிஸ்ட் போடும் ஷங்கர்.! ஆனா அங்கே மட்டும் என்ன வாழுது?

director shankar
நல்ல உதவி இயக்குனர்தான் நல்ல இயக்குனர் ஆக முடியும். ஷங்கர் உதவி இயக்குனர் ஆக இருந்த காலகட்டத்தில் எந்தளவுக்கு மிகச்சிறந்த இயக்குனர் ஆக இருந்தார் என்பது குறித்து இயக்குனர் ஏ.வெங்கடேஷ் தெரிவித்து இருந்தார். இவர் ஷங்கரிடம் ஏற்கனவே உதவியாளராக பணிபுரிந்தவர்.
இயக்குனர் என்பவர் எப்படிப்பட்ட செயல்திறன் கொண்டவராக இருக்க வேண்டும் என்று பத்திரிகை பேட்டி ஒன்றில் ஷங்கர் அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். என்னென்ன சொல்றாருன்னு பாருங்க.
ஒரு டைரக்டருக்கு சினிமா என்கிற சயின்ஸ் தெரியணும். சினிமா என்கிற பிசினஸ் தெரியணும். சினிமா என்கிற நிர்வாகம் தெரியணும். இப்படி ஒரு பாட்டு வேணும்னு சொல்லி அந்த இசை அமைப்பாளரிடம் இருந்து அந்தப் பாட்டை வாங்கத் தெரிய வேண்டும். இந்த லென்ஸைப் போடுங்கன்னு கேமராமேன்கிட்ட சொல்லணும்னா முதல்ல அந்த லென்ஸைப் பற்றி முழுமையாகத் தெரிந்து இருக்க வேண்டும்.
ஆர்ட் டைரக்டர்கிட்ட திருத்தத்தைச் சொல்லும்போது எதற்காக இந்தத் திருத்தம்னு அவர் கேட்டாருன்னா அதுக்குப் பதில் சொல்லத் தெரிய வேண்டும். எல்லாத்தையும் ஸ்பாட்ல போய் பார்த்துக்கலாம்னு சூட்டிங்ஸ்பாட்டுக்குப் போயிட்டா 200 பேரு உங்க முகத்தையே பார்த்துக்கிட்டு இருப்பார்கள்.
அவர்கள் எல்லாரையும் மேய்க்கணும்னா லகான் உங்க கையில இருக்கணும். இல்லன்னா குதிரை உங்களைக் குப்புறத் தள்ளிவிட்டுப் பறந்துவிடும். சரியாக சொல்லணும்னா இயக்குனர் பணி என்பது ஒரு வலி நிறைந்த விஷயம். அதைப் புரிந்து கொண்டும், தெரிந்து கொண்டும் செயல்பட்டால் இந்தப் பிரச்சனைகள் எதுவும் வராம சுமூகமாகப் படப்பிடிப்பை நடத்த முடியும். இவ்வாறு ஷங்கர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நமக்கு என்ன ஒரு கேள்வின்னா இவ்ளோ விஷயத்தையும் தெரிந்தவர் எப்படி சமீபகாலமாக எந்த ஒரு ஹிட்டும் கொடுக்க முடியாமல் இருக்கிறார் என்பதுதான். இந்தியன் 2 படமும் சரி, கேம் சேஞ்சரும் சரி, எதிர்பார்த்த அளவு படம் போதிய வரவேற்பைப் பெறாமல் போனதே இதற்கு என்ன காரணம் என்று அவருக்குத் தெரியாமலா இருக்கும்? ஆரம்பத்தில் தொடர் ஹிட்டுகளைக் கொடுத்து அசத்தினார் ஷங்கர். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இப்ப எங்கே போச்சு? இனி வரும் அவரது படங்களில் இதற்கு விடை கிடைக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.