எஸ்.ஏ.சி-க்கும் விஜய்க்கும் நடந்த பயங்கர சண்டை!.. பேட்டியில் போட்டு உடைத்த ஷங்கர்...

shankar
தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். சட்டம் ஒரு இருட்டறை, நெஞ்சுக்கு நீதி என புரட்சிகரமான திரைப்படங்களை இயக்கியவர். இவரின் மகன் விஜய்க்கும் சினிமா ஆசை வரவே ‘நாளைய தீர்ப்பு’ என்கிற திரைப்படம் மூலம் அவரை நடிகராக்கினார். கஷ்டப்பட்டு விஜயை வைத்து சில படங்களை இயக்கினார். ஆனால், அவை வெற்றிப்படங்களாக அமையவில்லை.

vijay sac
ஒருவழியாக பூவே உனக்காக திரைப்படம் விஜயின் வாழ்க்கையை மாற்றியது. அதன்பின் பல திரைப்படங்களில் நடித்து தற்போது தளபதியாக ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார் விஜய். கடந்த பல வருடங்காகவே அப்பா எஸ்.ஏ.சி இயக்கத்தில் விஜய் நடிக்கவே இல்லை. அதோடு, ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விஜய் சென்னை நீலாங்கரை பகுதியில் வீடு கட்டி தனியாக வசிக்க துவங்கிவிட்டார். அப்பாவோடு தற்போது அவருக்கு எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. இதை எஸ்.ஏ.சியே பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

vijay sac
இந்நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவியாளராக பணிபுரிந்த இயக்குனர் ஷங்கர் ஒரு பேட்டியில் ஒரு சுவாரஸ்ய தகவலை கூறியுள்ளார். நான் சந்திரசேகரிடம் உதவியாளராக இருந்த போது அவரின் வீட்டிலேயே அலுவலகம் இருந்தது. விஜய் அப்போது சின்ன பையன். ஒரு நாள் வீட்டில் ஒரே சத்தமாக இருந்தது. விஜயை படிக்கெட்டில் இருந்து இழுத்து சென்றார் எஸ்.ஏ.சி. அப்பா- பையனுக்கு இடையே பெரிய சண்டை நடக்கிறது என நாங்களும் அதிர்ச்சி அடைந்தோம்.

Shankar
அதன்பின் எங்களிடம் வந்த விஜயின் அப்பாவிடம் ‘என்ன சார் பிரச்சனை? எனக்கேட்டோம். ‘ஊசி போட வர மாட்டேன் என அடம்பிடித்தான். அவனை காரில் உட்கார வைத்துவிட்டு வருகிறேன்’ என சொன்னார். இப்படித்தான் எனக்கு விஜயை தெரியும். அவர் சிறுவனாக நடித்த போது அவருக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தேன். ஆனால், பின்னாளில் இவ்வளவு பெரிய நடிகராக மாறுவார் என நான் எதிர்பார்க்கவில்லை’ என அந்த பேட்டியில் ஷங்கர் கூறியிருந்தார்.
ஷங்கரின் இயக்கத்தில் நண்பன் திரைபப்டத்தில் விஜய் நடித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அந்த டைரக்டர் நேரிடையாக வந்து ஹோட்டலுக்கு கூப்பிட்டான்!.. வரலட்சுமி சொன்ன ஒரே வார்த்தை..