திக்குமுக்காடிப்போன புதுமை இயக்குனர் ஸ்ரீதர்… எல்லாம் அந்த சூப்பர்ஹிட் படத்தால் தானா?
புதுமை இயக்குனர் ஸ்ரீதருடைய படைப்புகளில் மிகவும் வித்தியாசமானது நெஞ்சில் ஓர் ஆலயம். அது எப்படிப்பட்ட பெயரைப் பெற்றுத் தந்தது என்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்தப் படத்தைப் பொருத்தவரை பல சிறப்புகள் உண்டு. வாஹினி ஸ்டூடியோவில் ஒரு ஆஸ்பத்திரி செட்டைப் போட்டு 25 நாள்கள் படப்பிடிப்பு நடத்தி, நெஞ்சில் ஓர் ஆலயம் படப்பிடிப்பை நிறைவு செய்தார் இயக்குனர் ஸ்ரீதர். அந்தப் படத்தின் மாபெரும் வெற்றியின் காரணமாக அது இந்தியிலும் உருவாக்கப்பட்டது. அந்தப் படத்தில் கல்யாண்குமார் நடித்து இருந்த […]
புதுமை இயக்குனர் ஸ்ரீதருடைய படைப்புகளில் மிகவும் வித்தியாசமானது நெஞ்சில் ஓர் ஆலயம். அது எப்படிப்பட்ட பெயரைப் பெற்றுத் தந்தது என்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்தப் படத்தைப் பொருத்தவரை பல சிறப்புகள் உண்டு. வாஹினி ஸ்டூடியோவில் ஒரு ஆஸ்பத்திரி செட்டைப் போட்டு 25 நாள்கள் படப்பிடிப்பு நடத்தி, நெஞ்சில் ஓர் ஆலயம் படப்பிடிப்பை நிறைவு செய்தார் இயக்குனர் ஸ்ரீதர். அந்தப் படத்தின் மாபெரும் வெற்றியின் காரணமாக அது இந்தியிலும் உருவாக்கப்பட்டது.
அந்தப் படத்தில் கல்யாண்குமார் நடித்து இருந்த அந்த டாக்டர் வேடத்தில் நடிக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டவர் ராஜ்கபூர். ஆனாலும் அந்த கதாபாத்திரத்தை ராஜ்கபூருக்கு வழங்காமல், தன்னோட இனிய நண்பரான ராஜேந்திரகுமாருக்குக் கொடுத்தார் ஸ்ரீதர். முத்துராமனின் கதாபாத்திரத்தில் ராஜ்கபூர் நடிக்க, தேவிகா நடித்த கதாபாத்திரத்தில் மீனாகுமாரி நடித்தார். சாதாரணமாக சக கதாநாயகர் நடித்த ஒரு படம் வெற்றி பெற்றால் மற்ற கதாநாயகர்கள் என்ன செய்வாங்கன்னா, ரொம்ப நல்லாருக்கு படம்னு பாராட்டிவிட்டு கடந்து செல்வார்கள்.
ஆனால் இந்திப் பட உலகின் முடிசூடா மன்னராக ஒரு காலகட்டத்தில் இருந்த திலீப்குமார் அப்படி எல்லாம் கடந்து போகல. அந்தப் படத்தை இயக்கிய ஸ்ரீதருக்கும், படக்குழுவினருக்கும் மாபெரும் விருந்து அளித்து கவுரவித்தார். பம்பாயில் இருந்து அப்போது வெளிவந்து கொண்டு இருந்த ஒரு ஆங்கில பத்திரிகையில ‘தில் ஏக் மந்திர்’ என்ற அந்தப் படத்தைப் பாராட்டி பெரிய கட்டுரை எழுதி ஸ்ரீதரைக் கௌரவித்தார் திலீப்குமார். அந்தப் பெருந்தன்மையைப் பார்த்து நான் திக்குமுக்காடிப் போனேன் என்று ஒரு பத்திரிகையில் பதிவு செய்து இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீதர்.