பிளாஷ்பேக்: சட்டசபையில் கடும் விவாதத்தைக் கிளப்பிய ஸ்ரீதர் படம்! அட அது சூப்பர்ஹிட்டாச்சே!

director sridhar
ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய படம் காதலிக்க நேரமில்லை. இந்தப் படத்தின்போது ஆரம்பத்தில் கடும் சவால்களை சந்தித்தார் ஸ்ரீதர். முதலில் ஒரு கதை எழுதி அதை 10 நாள்கள் படமாக்கினார் ஸ்ரீதர். அதைப் போட்டுப் பார்;த்த போது அவருக்கு திருப்தி வரல.
அதனால மீண்டும் கதை எழுதி படமாக்கினார். அதுதான் நாம இப்போ பார்க்குற காதலிக்க நேரமில்லை. படம் வெளியானபோது இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தமிழகம் முழுவதும் அது வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருந்தது. அப்போது சட்டமன்றத்தில் ஒரு பிரச்சனை எழுந்தது.
படத்தின் பெயர் ஆபாசமாக இருக்கிறது. காட்சிகளும் ஆபாசமாக இருக்கிறது. அதனால் திரையிட தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் பேசப்பட்டன. இந்த விவாதத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் படத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அந்தப் படத்தைப் பொருத்தவரையில் படத்தின் பெயரும் சரி. காட்சிகளும் சரி. கவர்ச்சிகரமாக இருக்கிறதே தவிர, ஆபாசமில்லை என்பதே அவர்களது கருத்தாக இருந்தது.
அதனால்தான் படத்திற்கு எவ்வித தடையும் இல்லை. அந்த வகையில் படத்திற்கு இந்த விவாதமே பெரிய பிளஸ் ஆகி விளம்பரமானது. அந்தப் படம் வெள்ளிவிழா காண இதுவும் ஒரு காரணம் என்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.
1964ல் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான படம் காதலிக்க நேரமில்லை. ரவிச்சந்திரன் இந்தப் படத்தில் தான் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். ராஜஸ்ரீ, காஞ்சனா, முத்துராமன், டிஎஸ்.பாலையா, விஎஸ்.ராகவன், நாகேஷ், சச்சு உள்பட பலர் நடித்துள்ளனர். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் பாடல்கள் சூப்பர். என்ன பார்வை, மாடிமேலே, உங்கள் பொன்னான கைகள், அனுபவம் புதுமை, நாளாம் நாளாம், மலரென்ற முகமொன்று, காதலிக்க நேரமில்லை, நெஞ்சத்தை அள்ளித்தா ஆகிய இனிமையான பாடல்கள் உள்ளன.