மனோஜைக் காயப்படுத்திய பெரிய தயாரிப்பாளர்… சுசீந்திரன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

by sankaran v |   ( Updated:2025-04-05 01:38:58  )
susheendran manoj
X

susheendran manoj

Manoj: மனோஜ் காலமானது குறித்து பிரபல இயக்குனர் சுசீந்திரன் சில தகவல்களைச் சொல்கிறார். என்னன்னு பார்க்கலாமா…

சினிமாவை நேசிக்கக்கூடியவர். அவருக்கிட்ட பிடிச்சதே அதுதான். எப்பவுமே ஸ்மைலிங் இருக்கும். ஹேப்பியா இருப்பாரு. கூடப்பிறந்த பிரதரா பார்ப்பாரு. எல்லாருக்கும் அவர் மறைந்தது பெரிய அதிர்ச்சியா இருந்தது. பர்சனலா எனக்கு அதை நம்புறதுக்கே ரொம்ப நேரமாச்சு.

சர்ஜரி பண்ணிட்டு 15 நாள் வீட்டுல ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருந்தாரு. ஹார்ட் உள்ளே போற வால்வுல பிரச்சனைன்னுதான் சொன்னாங்க. அதுல ஏதோ பிளட்ஜ்ன்னாங்க. பிளட் சர்க்குலேஷன். அதுக்கு மட்டும் ஆபரேஷன் பண்ணதா சொன்னாங்க. அவரோட விருப்பத்துல தான் இந்த ஆபரேஷன் நடந்துச்சு சிவியர் கன்டிஷன் கிடையாது. எல்லாமே ஓகேன்னுதான் சொன்னாங்க. ஆனா திடீர்னு இப்படி நடக்கும்னு தெரியாது. அவருக்கு சுகர், லோ பிரஷர் இருந்தது.

இன்சுலின் போட்டுக்கிட்டு இருந்தாரு. அதனால அவரால ரொம்ப எனர்ஜியா இருக்க முடியாது. அதே நேரம் சூட்டிங்ஸ்பாட்டுக்கு வந்துட்டா அவ்ளோ எனர்ஜியா இருந்தாரு. என்கூட சேம்பியன் படம் பண்ணினாரு. அப்ப தான் எனக்கு அவருக்கு லோ பிரஷர் இருக்குறது தெரியும். அப்புறம் ஈசன் படத்துல ஒர்க் பண்ணினோம். நான் வந்து பாரதிராஜாகிட்ட சொன்னேன். 'அவருக்கு நடிக்கிறதை விட இயக்குனர் ஆகறதுதான் ஆசை. உங்களோட ஆசைக்கு நடிகரா ஆக்கிட்டீங்க'ன்னு சொன்னேன்.

markali thingalஅப்புறம்தான் மார்கழி திங்கள் படம் உருவாச்சு. நான் தொடர்ந்து பண்ணிக்கிட்டே இருக்கணும்னு மனோஜ்கிட்ட சொன்னேன். அதுக்கான பிராசஸ் போய்க்கிட்டே இருந்தது. அந்த நேரத்துல இப்படி ஆனது அதிர்ச்சியா இருந்தது. மார்கழித்திங்கள் படத்தைப் பார்த்து இவ்ளோ திறமையா பையனுக்கு. நான் முன்னாடியே அறிமுகப்படுத்தாமப் போயிட்டேனேன்னு வருத்தப்பட்டாரு.

அவரு இயங்கிக்கிட்டே இருந்தாருன்னா… அவருக்கு தொடர்ந்து படங்கள் இயக்க வாய்ப்பு கிடைச்சிருந்தா, இப்படி ஒரு பிரச்சனை வந்துருக்காதுன்னு நான் நினைக்கிறேன் என்கிறார் இயக்குனர் சுசீந்திரன். பாரதிராஜாவோட பையன்கறதனால என்னால பலரிடமும் வாய்ப்பு கேட்க முடியலை அப்படின்னு மனோஜ் நிறைய தடவை ஃபீல் பண்ணிருக்காரு. ஒரு பெரிய தயாரிப்பாளர்கிட்ட போய் கதை சொல்லிருக்காரு.

அந்த நேரத்துல சரி. பண்ணலாம்னு சொன்னாராம். அவரு வெளியே போனதும் மனோஜ் வந்தா உள்ளே விடாதீங்கன்னு சொன்னாராம். அப்படி எல்லாம் அவரு காயப்பட்டுருக்காரு. படங்கள் இல்லன்னாலே அடுத்து என்ன பண்ணப்போறீங்க அப்படிங்கற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது. அதுதான் பெரிய சிக்கல். அதனாலயே நிறைய பங்ஷனைத் தவிர்த்துட்டாரு. அவரை இயக்குனர் ஆக்கணும்கறது எனக்கு ஆசை. பல தடைகளைத் தாண்டி சிறப்பா அந்தப் படத்தை இயக்கி இருந்தாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story