அஜித் ஒரு வேற்றுகிரகவாசி!.. அவருக்கு பணம் மட்டும்தான் முக்கியம்.. கே.ராஜனையே மிஞ்சிய தங்கர் பச்சான்
Actor ajith: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக கோலோச்சி இருப்பவர் நடிகர் அஜித். எந்தவொரு பொது விழாக்களுக்கும் செல்லாதவர். பொதுவாக வெளியிடங்களில் அவரை காண்பது மிகவும் அரிது. விமான நிலையத்தை தவிர அஜித்தை வேறெங்கும் பார்க்கவும் முடியாது.
இத்தனை புகழைக் கொடுத்த ரசிகர்களையும் அவர் சந்திப்பதும் இல்லை. பொதுவாகவே ஒரு சாதாரண மனிதராக அவரால் வெளி வர முடியாத சூழ்நிலை. அந்தளவுக்கு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். அதனால் வெளி நாடுகளில் அவர் விருப்பப்படி ரோட்டுக் கடைகளில் டீ குடிப்பது, வெளி இடங்களில் தரையில் உட்காருவது என அவர் விருப்பப்படி இருக்க முடிகிறது.
இதையும் படிங்க: எஸ்.ஏ.சந்திரசேகர் செய்த வேலை… கோபத்தில் வீட்டுக்கே போய் சண்டை போட்ட விஜயகாந்த்…
அதன் காரணமாகவே அவர் அடிக்கடி வெளிநாடு சென்று விடுகிறார்.இப்படி இருக்கத்தான் அஜித் விரும்புகிறார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜானில் நடக்கிறது.
இந்த நிலையில் இயக்குனர் தங்கர் பச்சான் அஜித்தை பற்றி அவருடைய ஆதங்கத்தை கொட்டித் தீர்த்திருக்கிறார். அதாவது ‘இப்போது வரவங்க பொறுக்கியும் திருடங்களாகவே வராங்களே. மக்களுக்கு என்னயா திருப்பி செஞ்சீங்க? எங்க மக்களையே சுரண்டி திங்கிறவங்கள பத்தி நான் பேச கூடாதா? ’
இதையும் படிங்க: பாதி டிரெஸ்ல காட்டினா பல்ஸ் எகிறுது!.. ஃபோகஸ் பண்ணி ரசிக்கும் காஜி ஃபேன்ஸ்…
‘ நீங்க அஜித் கிட்ட தங்கர் பச்சானை பத்தி கேளுங்களேன். ஏன் ஒருத்தரும் கேட்க மாட்டீங்க. என்ன மட்டுமில்ல. வேற யாரையாவது பத்தி கேளுங்க. தெரியாது. ஏன்னா அவர் வேறொரு கிரகத்துல இருக்கிறாரு. வேறொரு கோள்ல வாழ்ந்துட்டு இருக்கிறாரு. ’
‘அவர் தயாரிப்பாளர்களை சந்திக்க மாட்டாரு. பணம் கொடுத்து உடல் உழைப்பை போட்டு எத்தனை பேரு அவர் படத்தை வந்து பாக்குறான்? அந்த பார்வையாளர்களையும் பார்க்கிறது இல்ல. ராஜவாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கீங்க. அத கொடுத்தது அந்த உழைக்கும் மக்கள். ஆனால் அவர்கள் யாரும் வேணாம். கோடி கோடியா வரணும். வாங்கனும். இதுதான் ஒரே குறிக்கோள்’ என்று அஜித்தை பற்றி தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார் தங்கர் பச்சான்.
இதையும் படிங்க: 80களில் குடும்பப் பாங்கான படங்களில் தெறிக்க விட்ட விசு… எப்படி நடந்ததுன்னு தெரியுமா?