என்ன பெரிய லோகி? என் வயசுதான் அவனுக்கும்.. வயித்தெறிச்சலில் வசைபாடும் நடிகர்

by Rohini |
loki
X

loki

Director Lokesh kanagaraj: தமிழ் சினிமாவில் தற்சமயம் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தின் மூலம் தன் இயக்குனர் அறிமுகத்தை பதிவு செய்த லோகேஷ் கனகராஜ் எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியதில்லை.

அவர் சொந்த முயற்சிலேயே இன்று ஒரு மாபெரும் அந்தஸ்து பெற்ற இயக்குனராக மாறியிருக்கிறார் லோகேஷ். முதல் படமே வெற்றிப்படம். ஆனால் அதை பற்றி யாரும் பெரிதாக அந்த நேரத்தில் பேசிக் கொள்ளவில்லை. அடுத்ததாக கைதி படத்தை எடுத்து ஒரு மாஸை கிரியேட் செய்தார் லோகேஷ்.

இதையும் படிங்க: விஷால் நடித்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டான படம்! ஆனால் சிம்பு நடிக்க வேண்டியது.. என்ன படம் தெரியுமா

சொல்லப்போனால் கைதி படத்தின் வெற்றிதான் மாநகரம் படத்தை மீண்டும் பார்க்க வைத்தது என்று சொல்ல வேண்டும். யாருப்பா இவன்? என மூத்த இயக்குனர்களை எல்லாம் அண்ணாந்து பார்க்க வைத்த படமாக கைதி படம் அமைந்தது. அந்தப் படத்தை முழுக்க முழுக்க இருட்டிலேயே எடுத்து வெற்றி கண்டார்.

அதை தொடர்ந்து விஜயை வைத்து மாஸ்டர் என்ற மற்றுமொரு ப்ளாக் பஸ்டர் ஹிட்டை கொடுத்தார். இப்படி அவர் எடுத்த லியோ வரைக்கும் வெற்றி பாதைகளாகவே லோகேஷுக்கு அமைந்தது. அடுத்ததாக ரஜினியை வைத்து ஒரு படம் எடுக்க இருக்கிறார் லோகேஷ்.

இதையும் படிங்க: ஒதுக்கப்படும் தமிழ் தயாரிப்பாளர்கள்… முன்னணி தமிழ் நாயகர்களுக்கு வலை வீசும் தெலுங்கு தயாரிப்பாளர்கள்…

இந்த நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான தருண் கோபி லோகேஷின் வளர்ச்சியை பற்றி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது அதென்ன எல்லாரும் லோகி லோகினு சொல்றீங்க? எனக்கு அவனுக்கும் ஒரே வயசுதான். என்ன நான் 24 வயதிலேயே இயக்குனராகி விட்டேன். அவன் கொஞ்சம் லேட்டா வந்திருக்கான் அவ்ளோதான் என தன் ஆதங்கத்தை கூறினார்.

‘படம் பண்ண மாட்ட விடமாட்டிக்கீங்கா சார். அப்ப எடுத்த படத்தை வச்சு ரொம்ப நாளா இந்த சினிமாவில் இருக்கிறவர்னு சொல்றாங்க. ஆனால் எனக்கும் லோகேஷுக்கு ஒரே வயசுதான். எங்க போனாலும் காரி துப்புறானுங்க. திமிரு 2 படத்திற்கு கூட அந்த பெயரை வைக்கக் கூடாதுனு பிரச்சினை பண்றாங்க’ என மேலும் தருண் கோபி கூறினார்.

இதையும் பட்ங்க: அதகளம் செய்யும் ரஜினி.. அதிரவைக்கும் ரஹ்மான்.. வெளியான லால் சலாம் பட முதல் விமர்சனம்…

அதாவது திமிரு பட வெற்றிக்கு பிறகு தருண் கோபி எந்தவொரு படத்தை சரிவர கொடுக்கவில்லை. அவருக்கு ஏகப்பட்ட பிரச்சினைகளாம். பேட்டி கொடுக்க வரும் போது மது குடித்துவிட்டு வந்து பேசுகிறார் என்றெல்லாம் பொய் சொல்லி அவர் பெயரை கெடுத்து வருகிறார்களாம். அடுத்ததாக திமிரு 2 படத்தை எடுக்க இருக்கிறாராம். அந்தப் படத்தில் என்னை வேறொரு ரூபத்தில் பார்க்க போகிறீர்கள் என சவால் விட்ட மாதிரி கூறினார்.

Next Story