Connect with us

Cinema History

நடிகையை வழிக்குக் கொண்டு வர இயக்குனர் போட்ட திட்டம்… ஆனால் நடந்ததுதான் ஹைலைட்..!

சினிமா என்றாலே ஒரு மாயா உலகம் தான். இதில் யார் ஜெயிக்கிறார்கள் என்பது பெரிய சவால். அதை விட படத்தில் நடிப்பதற்குள் நடிகைகள் படும் அவலம் சொல்ல மாளாது. படுக்கை அறைக்கு அழைக்கும் அவலம் அந்தக்காலத்தில் இருந்தே அரங்கேறியுள்ளது. அவற்றில் ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.

பாரதிராஜாவோடு டிராவல் பண்ணின டைரக்டர் அவர். ரொம்பக் கோபக்காரர். அவரது படத்தில் ஒரு நடிகை நடிக்கிறார்.  அவ்வப்போது அந்த நடிகையைக் கோபத்தில் திட்டுகிறார். அவருக்கும் அந்த சபலம் வந்து விடுகிறது. மாலை நேரமானால் நடிகையைக் கொஞ்ச ஆரம்பித்து விடுகிறார்.

ஒரு கட்டத்தில் தனது விருப்பத்தை நேரடியாகவே கேட்டு விடுகிறார். அதற்கு நான் ஒரு அளவு வரைதான் நான் நடிப்பேன். லிமிட்டைத் தாண்டினால் சினிமாவே வேண்டாம் என்று போய்விடுவேன் என்கிறார், நடிகை. இது டைரக்டருக்கு ஆத்திரத்தைத் தரவே இவளை எப்படியாவது வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார்.

அதற்காக ஒரு காட்சியில் மொபட் ஓட்டி வர வேண்டும் என்கிறார். ஓட்டவே தெரியாது என்கிறாள் அந்த கதாநாயகி. இல்லை. நீ ஓட்டியே பழக வேண்டும் என்று ஆர்டர் போடுகிறார். உடனே அந்தப் பொண்ணு ஊரில் ஒருவரிடம் மொபட் வாங்கிக் கத்துக்கொள்கிறார்.

இப்போது சூட்டிங் நடக்கிறது. ஊர் மக்கள் வேடிக்கை பார்க்கின்றனர். படப்பிடிப்பு கும்பகோணம், தஞ்சைப்பகுதிகளில் நடக்கிறது. அப்போது காவிரி ஆறு வறண்டு போய் இருக்கிறது.

டிவிஎஸ் 50யை இரு கரைகளில் இருந்து அப்படியே இறங்கி வர வேண்டும் என்கிறார். அது என்னால் முடியவே முடியாது என்கிறார் கதாநாயகி. இல்லம்மா. நீ இறங்கியே ஆகணும் என்கிறார் டைரக்டர். மொத்த யூனிட்டுமே அந்தப் பொண்ணுக்காக இரக்கப்படுகிறது.

அந்தப் பெண்ணும் வேறு வழியில்லாமல் சம்மதித்து இறங்குகிறது. அப்படியே தலைகீழாக கவிழ்ந்து உருண்டு விழுந்து உடல் எல்லாம் பயங்கர அடி. ரத்தக் காயங்கள். ஒரு கட்டத்தில் ஊர்க்காரங்க எல்லாரும் சேர்ந்து அந்த டைரக்டரை அடிக்கப் போயிட்டாங்க.

அய்யய்யோ… இவ்ளோ தூரம் நம்மை இந்த ஊர்க்காரங்க கவனிச்சிருக்காங்களே… என மிரண்டு விடுகிறார். அதோடு அந்தப் பெண்ணும் சரி. அதன்பிறகு படம் நடிக்கவே வரவில்லை. அதன்பிறகு வேறு யாரையோப் போட்டு படத்தையும் எடுத்து விட்டார்கள்.

மேற்கண்ட தகவலை வலைப்பேச்சு அந்தனன் தெரிவித்துள்ளார்.

பாலுமகேந்திரா, பாக்யராஜ், பாலசந்தர், ராஜசேகர், ஐ.வி.சசி, பிஎஸ்.நிவாஸ் உள்பல பலர் அந்தக் காலகட்டத்தில் இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top