சோறு போட்டு வளர்த்தா இதான் கதி! வடிவேலுவை பற்றி என்ன சொல்லியிருக்காரு பாருங்க கவுண்டமணி
Vadivelu Goundamani: தமிழ் சினிமாவில் இன்று ஒரு வைகை புயலாக வடிவேலு நகைச்சுவையில் ஒரு பெரிய உச்சத்தில் இருக்கும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். ஆரம்பத்தில் ராஜ்கிரனால் அறிமுகமான வடிவேலு என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலமாக தான் முதன் முதலில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல படங்களில் துணை கதாபாத்திரத்திலும் சின்ன சின்ன காமெடி காட்சிகளிலும் நடித்து வந்த வடிவேலு தேவர் மகன் படத்தில் தான் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அவருக்கு உண்டான ஒரு அந்தஸ்தை பெற்றார்.
கவுண்டமணி செந்தில் இவர்களுடன் சேர்ந்து ஒரு சில படங்களில் இணைந்து நடித்திருக்கிறார் வடிவேலு. அப்பொழுதே வடிவேலுவை கவுண்டமணி அடித்ததாக ஒரு செய்தி வைரலானது. இந்த நிலையில் பிரபல இயக்குனரான வி.சேகர் வடிவேலுவை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டணா செலவு பத்தணா போன்ற படங்களை எடுத்தவர் தான் இவர்.
இதையும் படிங்க: அத மறைக்க பிட்டு துணி போதுமா?!.. கடல் கன்னி போல கிளுகிளுப்பு காட்டும் பேச்சுலர் பட நடிகை…
ஒரு சமயம் இந்த இயக்குனர் கவுண்டமணியை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறுயிருப்பதுதான் தற்போது வைரலாகி வருகின்றது. அதாவது வடிவேலு டேக் ஆப் ஆகி ஒரு இடத்திற்கு சென்று விட்டார். அதனால் கவுண்டமணியின் மார்க்கெட் சிறிதளவு குறைந்தது .அதனால் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தார். இவர் மிகவும் கஷ்டப்பட்டு வந்தவர். அதனால் கொஞ்சம் ஸ்ட்ரிட்டாக இருக்கிற மாதிரி தோன்றும்.
ஆனால் உண்மையிலேயே கவுண்டமணி மிகவும் நன்றாக பேசக்கூடியவர். பழகக் கூடியவர். ஒரு சமயம் என்னிடம் வந்து கவுண்டமணி ‘என்ன ! நீ என்னை வச்சு படங்கள எடுத்த. எல்லாமே 100 நாள் ஓடுச்சு. அப்புறம் அந்த குச்சி மாறி ஓம குச்சி மாதிரி ஒருத்தன் இருப்பானே வடிவேலு. அவன போட்டு படம் எடுத்த.
இதையும் படிங்க: நாலு நாள் நடித்த அந்தப் படத்துக்காக தேம்பி தேம்பி அழுத சரத்குமார்… அப்படி என்னதான் நடந்தது?
அவனுக்கு ஒரு ஜோடி வேற. சரளாவை சேர்த்த. இப்படி எல்லாம் பண்ண. நல்லா டெவலப் ஆனான். இப்ப நீ படம் பண்ணாம இருக்குற. இந்த நேரத்துல ஏன் அவன் உதவி பண்ண மாட்டானா?’ என கேட்டதாக கூறினார் .அதற்கு இந்த இயக்குனர் அவன் சம்பளத்தில் பெரிய உச்சத்திற்கு போய்விட்டான். பெரிய பெரிய நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க ஆரம்பித்து விட்டான். போன் பண்றேன்னு சொல்லி அப்படியே போயிட்டான் என்று சொன்னாராம். அதற்கு கவுண்டமணி இப்போ உள்ள நடிகர்கள் எல்லாம் அப்பப்ப யூஸ் பண்ணிக்கிட்டு விடுறாங்க இல்லையா என கூறினாராம்.