வாரிசு படத்தின் இயக்குநர் வம்சி... இதற்கு முன்னர் இயக்கிய முக்கிய படங்களின் லிஸ்ட்... இந்த படமும் இவரோடதா?

by Akhilan |   ( Updated:2022-10-23 15:42:00  )
வம்சி
X

வம்சி

விஜயின் நடிப்பில் உருவாகி வரும் படம் வாரிசு. அப்படத்தினை வம்சி இயக்கி இருக்கிறார். அவர் இதற்கு முன்னர் இயக்கிய படங்கள் என்னென்ன தெரியுமா..?

வம்சி

வம்சி

முன்னா படம்தான் வம்சியின் முதல் படம். பிரபாஸ், இலியானா, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டத்துடன் படம் வெளியானது. இருந்தும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை.

அவரின் இயக்கத்தில் வெளியான படம் தான் பிருந்தாவனம். இப்படம் வம்சிக்கு பெரிய ரீச்சை சினிமா உலகத்தில் கொடுத்தது. ஜூனியர் என்.டி.ஆர், காஜல் அகர்வால், சமந்தா ஆகியோரின் நடிப்பில் படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வித்தியாச ட்விஸ்ட் வைத்திருந்தார் வம்சி.

2014-ல் தெலுங்கில் வெளிவந்த படம் தான் யவடு. ராம் சரண், ஸ்ருதி ஹாசன், அல்லு அர்ஜூன், எமி ஜாக்சன், காஜல் அகர்வால் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தார்.

வம்சி

வம்சி

வம்சியின் முதல் தமிழ் திரைப்படம் தான் தோழா. ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியானது. கார்த்தி மற்றும் நாகர்ஜூனா நடிப்பில் படம் நல்ல வரவேற்பினை பெற்றது.

Next Story