
Cinema News
ரெண்டு வருஷமா அந்தப் பக்கமே போகல! அஞ்சலி நடித்த படத்தால் இயக்குனருக்கு வந்த மிரட்டல்
Actress Anjali : தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார் நடிகை அஞ்சலி. அதனை அடுத்து அங்காடித்தெரு படத்தில் ஒரு துணிக் கடையில் வேலை பார்க்கும் பெண்ணாக நடித்து ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றார்.
அந்த படம் முழுவதுமே சென்னை தியாகராய நகரில் நடக்கும் சில உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட கதையாகத்தான் இருக்கும். அந்த நகரில் ஏகப்பட்ட கடைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. பிற மாநிலத்தில் இருந்தும் பிற ஊர்களில் இருந்தும் தங்கள் பிழைப்புக்காக சென்னையை நோக்கி பயணம் மேற்கொள்ளும் பல பேர் குவிந்து கிடக்கும் நகராக சென்னை தியாகராய நகர் விளங்குகிறது.
இதையும் படிங்க: ரிலீஸுக்கு முன்பு இப்படி ஒரு இன்பதிர்ச்சியா? ரசிகர்களுக்கு செம ட்ரீட் வைக்கப் போகும் தளபதி
பல கஷ்டங்களை தாண்டித்தான் இங்கு வேலை செய்து கொண்டிருக்கின்றனர். ஆதிக்க வர்க்கத்தில் இருக்கும் சில பேரால் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கும் ஆளாகின்றனர். எங்கே வெளியே சொன்னால் இருக்கிற வேலை போய்விடுமே என்ற காரணத்தினால் அதையெல்லாம் சகித்துக் கொண்டு வேலையை பார்த்து வருகின்றனர்.
இதையெல்லாம் வைத்துதான் அங்காடித்தெரு படத்தில் இயக்குனர் வசந்தபாலன் அழகாக காட்டியிருப்பார். படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வெற்றியும் பெற்றது. ஆனால் இந்தப் படம் வெளியானதில் இருந்து வசந்தபாலன் தியாகராய நகர் பக்கமே போகலையாம்.
இதையும் படிங்க: அந்த இடத்த பாத்து அல்லு வுட்ருச்சி!.. பட்டன கழட்டி பழானத காட்டும் பூஜா ஹெக்டே….
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக அந்த பக்கமே போகவில்லை என்றும் சில உண்மைச் சம்பவங்களை எடுத்துச் சொல்லும் போது எல்லா விதங்களிலும் மிரட்டல்கள் வரத்தான் செய்யும் என்றும் கூறினார்.
அதுமட்டுமில்லாமல் இப்படி கடையில் நடக்கிய அட்டூழியங்களை படத்தின் மூலம் சொன்னதால் எனக்கே ஒரு மனப்பிரச்சினை ஏற்பட்டது என்றும் ஒரு வேளை எல்லாரும் சேர்ந்து அடித்து விடுவார்களோ என்றும் பயந்து கொண்டே அந்த தெரு பக்கமே நான் போகவில்லை என்று வசந்தபாலன் கூறினார்.