உங்கள வச்சி படம் பண்ண முடியாது!. விஜய்க்கு ‘நோ’ சொல்லிவிட்டு சிம்புவிடம் போன இயக்குனர்!…

Published on: October 19, 2023
actor vijay
---Advertisement---

Actor vijay: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய். இவர் தனது குழந்தை பருவம் முதலே சினிமாவில் நடித்து வருகிறார். வெற்றி, சட்டம் ஒரு விளையாட்டு போன்ற திரைப்படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பின் நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனான விஜய் தனது தந்தையின் முயற்சியினாலே சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்தார். இவரின் வளர்ச்சியில் விஜயகாந்துக்கும் பங்கு உண்டு என அவரது தந்தையே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் இவர் கேப்டனுடன் இணைந்து நடித்திருந்தார். இப்படத்தின் மூலமே இவர் மக்களுக்கு தெரிய ஆரம்பித்தார்.

Also Read

இதையும் வாசிங்க:எனக்கு பக்க பலமே இவர்தான்! எல்லா கேரக்டருக்கும் செட்டாகக் கூடிய ஆள் – லோகேஷ் சொன்ன அந்த நடிகர்?

பின் காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய் திரைப்படங்களின் மூலம் பிரபலமானார். இப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தன. பின் பல திரைப்படங்களின் மூலம் இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.

இவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் தற்போது அனைத்து திரையரங்குகளிலும் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது. 2000ஆம் ஆண்டு காலகட்டத்தில் இவர் சினிமாவில் முன்னணிநடிகராக வளர்ந்து கொண்டிருந்தார். அப்போது இயக்குனர் வெங்கடேஷை அழைத்து தனக்காக ஒரு கதை தயார் பண்ணும்படி கூறியுள்ளார்.

இதையும் வாசிங்க:சிவாஜி குடும்பத்திற்காக கமல் இதை செய்வாரா? பழச நினைச்சு பார்த்தா கண்டிப்பா நடக்கும்..

பொதுவாக விஜயை ஒரு கதைக்கு சம்மதிக்க வைப்பது மிகவும் கடினமான விஷயம். அப்போது இயக்குனர் வெங்கடேஷுக்கு அவர் குறிப்பிட்ட கால அவகாசமும் கொடுத்துள்ளார். பின் மீண்டும் வெங்கடேஷை சந்தித்துள்ளார் நடிகர் விஜய். ஆனால் அப்போது வெங்கடேஷ் விஜயிடம் ‘நன்றாக யோசித்தேன், ஆனால் எனக்கு உங்களுக்கு ஏற்றாற் போல் கதை கிடைக்கவில்லை’ என கூறியுள்ளார்.

விஜய் மீண்டும் ஒரு வார காலம் அவகாசம் கொடுத்துள்ளார். ஆனால் அப்போதும் வெங்கடேஷுக்கு கதை சிக்கவில்லை. பின் விஜயிடம் தான் சிம்புவின் தம் படத்தில் ஒப்பந்தம் ஆகிவிட்டதால் என்னால் உங்களுக்கு படம் இயக்க முடியவில்லை என கூறிவிட்டாராம். ஆனால் அதே சமயம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட இயக்குனர் ரமணா விஜயிடம் வந்து திருமலை கதையை கூறியுள்ளார். விஜயும் கதைக்கு சம்மதித்து விட்டாராம். அந்த படம் விஜயின் வாழ்வில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. ஆக்‌ஷன் மற்றும் ரொமண்டிக் என இரு வகைகளிலும் விஜய் அப்படத்தில் கலக்கியும் இருந்தார்.

இதையும் வாசிங்க:கமலை நாயகனாக மாத்துவது இனி உங்கள் பொறுப்பு… பாலசந்தரிடம் சேர்த்து விட்ட பிரபல நடிகர்..!