டென்சன் பண்ணாதீங்க பாஸ்!. வெற்றிமாறனை கடுப்பாக்கிய ஹரிஸ் கல்யாண்!.. வட போச்சே!.

Published on: December 3, 2023
harishkalyan
---Advertisement---

Harish Kalyan: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்சியின் மூலம் பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண். பொதுவாக பிக்பாஸ் நிகழ்சிக்கு செல்பவர்கள் அனைவரும் அந்நிகழ்ச்சி முடிந்ததும் தனக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கும் எனும் நம்பிக்கையில்தான் செல்வர்.

ஆனால் அந்நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கும் போது இருக்கும் அளவுக்கு மக்கள் ஆதரவு அந்நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் இருப்பதில்லை. இதுதான் உண்மையும் கூட. அந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பெரிதளவில் பட வாய்ப்புகளும் கிடைப்பதில்லை.

இதையும் வாசிங்க:வன்மத்தை கக்கிய சூர்யா… வெளுத்து வாங்கிய வெற்றிமாறன்… இதெல்லாம் தேவையா பாஸ்?…

அப்படிப்பட்ட கனவுகளுடன் உள்ளே சென்றவர்தான் ஹரிஷ் கல்யாண். இவருக்கு ஓரளவு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. ஆனால் படவாய்ப்புகளோ பெரிதளவில் கிடைக்கவில்லை. ஹரிஷ் கல்யாண் சிந்து சமவெளி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இப்படம் இவருக்கு கை கொடுக்கவில்லை.

பின் இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் நடித்த பியார் பிரேமா காதல் இவருக்கு மக்களிடையே வரவேற்பை பெற்றுத் தந்தது. மேலும் இவர் ஓ மணப்பெண்ணே, பார்கிங் போன்ற பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இதையும் வாசிங்க:வீண் வதந்திகளை நம்பவேண்டாம்… கணவரின் புகைப்படங்களை பகிர்ந்த பிரேமலதா… அட நம்ம கேப்டன பாருங்க…

இவருக்கு வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் எனும் ஆசை நீண்ட நாளாக இருந்ததாம். அப்போது இவர் அடிக்கடி வெற்றி மாறனின் வீட்டிற்கு செல்வாராம். ஒரு நாள் வெற்றி மாறன் எதற்காக இத்தனை முறை வருகிறீர்கள்? என கேட்டாராம்.

அதற்கு ஹரிஷ் கல்யாண் ‘அடிக்கடி வந்து என்னை பற்றி உங்களிடம் நியாபகப்படுத்துகிறேன்’ கூறினாராம். உடனே வெற்றி மாறன் கடுப்பாகி ‘எனக்கு எப்போது உங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது தெரியும்.. அப்படி நீங்கள் தேவைப்படும்போது நானே கூப்பிட்டு விடுவேன்’ என சொல்லி அனுப்பிவிட்டாராம். இவ்வாறு தன்னை தேடி வந்தவருக்கு பல்பு கொடுத்து அனுப்பினாராம் இயக்குனர் வெற்றி மாறன்.

இதையும் வாசிங்க:நாடகம் to சினிமா.. கம்பீரமான குரல்.. கவரும் நடிப்பு… மறக்க முடியாத மேஜர் சுந்தர்ராஜன்…

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.