அமரன் என் டைட்டில்! பூஜை கூட போட்டாச்சி… இப்படி ஆட்டய போட்டுட்டாங்களே.. பொங்கும் அறிமுக இயக்குனர்

Published on: February 18, 2024
amaran
---Advertisement---

Amaran: சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது ‘அமரன்’ திரைப்படம். இரண்டு தினங்களுக்கு முன்புதான் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை பரவசப்படுத்தியது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் என்ற கதாபாத்திரத்தில் ஒரு ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார்.

இது உண்மையிலேயே மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகும் திரைப்படமாகும். இதுவரை இல்லாத அளவு சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது படத்தின் டீஸரை பார்த்தாலே தெரிகிறது.

இதையும் படிங்க: இளையராஜாவின் மெட்டில் பிறந்த யுவனின் பாடல்… அப்போ 80ஸ்க்கு… இப்போ 2கே கிட்ஸ்க்கு… இதெப்படி இருக்கு?

இந்த நிலையில் இந்தப் படத்திற்கு எப்படி அமரன் என்ற தலைப்பை வைத்தார்கள் என்ற பேச்சும் ஒரு பக்கம் அடிபடுகிறது. ஏற்கனவே கார்த்திக் நடிப்பில் ப்ளாப் ஆன அமரன் பட டைட்டிலை இந்தப் படத்திற்கு எப்படி வைத்தார்கள் என்று கூறிவருகிறார்கள்.

இதற்கிடையில் ஒரு உதவி இயக்குனர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அமரன் பட டைட்டிலை பற்றி அவருடைய ஆதங்கத்தை கொட்டித்தீர்த்திருக்கிறார். இவர் விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி படத்தில் வரும் ‘ நல்லா இருமா ’ என்ற பாடலை எழுதியவர். அவர் பெயர் விஜய் முத்துப்பாண்டி. பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் எஸ்.ஏ.சியிடம் உதவி இயக்குனராக இருந்தவர்.

இதையும் படிங்க: வில்லனாக நடித்த நடிகர் திலகத்தை அலார்ட் ஆக்கிய ரசிகர்கள்… நடந்தது இதுதான்!..

இவர் ஏற்கனவே கௌதம் கார்த்திக்கை வைத்து அமரன் என்ற தலைப்பில் ஒரு மாஸ் கதையை தயார் செய்து வைத்திருந்தாராம். அதுமட்டுமில்லாமல் ஒட்டுமொத்த ஸ்கிரிப்டையும் எழுதி முடித்துவிட்டு அதை எடுத்துக் கொண்டு அவருடைய குல தெய்வ கோயிலுக்கும் சென்று சாமி கும்பிட்டு வந்தாராம். இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் அமரன் டைட்டில் வெளிவந்ததும் இவருக்கு ஒரே ஷாக்.

gautham karthick
gautham karthick

நாம் ஆசைப்பட்டு வைத்திருந்த ஒரு பொருள் வேறொருவரிடம் இருக்கும் போது நம் மனம் எவ்வளவு பாடுபடும் என அனைவருக்கும் தெரியும். அதே மாதிரியான ஒரு மன நிலையில்தான் தன் உணர்வுகளை தன்னுடைய வலைதள பக்கத்தில் விஜய் முத்துப்பாண்டி பகிர்ந்திருக்கிறார். அதாவது அவர் அமரன் ஸ்கிரிப்டை எடுத்துக் கொண்டு கோயிலுக்கு போகும் போது கூட அவர் பயணித்த பேருந்தில் கார்த்திக்கின் ‘வெத்தல போட்ட சோக்குல’ பாடலும் ஒலித்திருக்கிறது.

இதையும் படிங்க: ஜெய்சங்கரை பத்தி தப்பாக பேசினாரா ரஜினிகாந்த்?… கடுப்பாகி கத்திய சூப்பர்ஸ்டார்.. என்ன நடந்தது?

அதனால் அவருக்கு அப்பவே ஏதோ ஜெயித்து விட்டதாகவே எண்ணியிருக்கிறார். தற்செயலாக நடந்தாலும் இது அவர் மனதில் ஏதோ ஒரு பரவசத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இப்போது அந்த அமரன் டைட்டில் விஜய் முத்துப்பாண்டி கையில் இல்லை எனும் போது அவர் பதிவை பார்த்த அனைவரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.