கண் கலங்கிட்டேன்!.. கேப்டன் அப்படி செய்ததை மறக்கவே மாட்டேன்... ஃபீலிங்ஸ் காட்டும் விக்ரமன்...
தமிழ் சினிமா ரசிகர்களிடம் புது வசந்தம் திரைப்படம் மூலம் பிரபலமானவர் இயக்குனர் விக்ரமன். முதல் படத்திலேயே ரசிக்க வைத்தார். வெட்டு குத்து, சண்டை காட்சி, கத்தி பேசும் வில்லன் என தமிழ் சினிமாவில் இல்லாத சினிமாக்களை இயக்கியவர் இவர். பாடல்களில் மெலடி போல் படங்களில் மெலடி கொடுத்தவர் விக்ரமன்.
புது வசந்தம் வெற்றிக்கு பின் புதிய மன்னர்கள், கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், பூவே உனக்காக, சூர்ய வம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தை போல, உன்னை நினைத்து, பிரியமான தோழி உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். இவர் இயக்கத்தில் வெளிவந்த சூர்யா வம்சம், வானத்தை போல ஆகிய படங்கள் வசூலில் சக்கை போடு போட்டது. வானத்தை போல திரைப்படத்தில் விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அதே விக்ரமன் இயக்கத்தில் ‘மரியாதை’ என்கிற படத்திலும் நடித்தார்.
இதையும் படிங்க: நம்பிக்கை துரோகம்!. மனதில் ஏற்பட்ட வேதனை.. விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டது இப்படித்தான்!..
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய விக்ரமன் ‘2011ம் வருடம் விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராகி விட்டார். ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த போது விஜயகாந்த் சாருக்கு வாழ்த்து சொல்ல நினைத்து அவரின் அலுவலகம் சென்றேன். அலுவலகத்தின் வெளியே கட்சிகாரர்கள், தொண்டர்கள், எம்.எல்.ஏக்கள் என பலரும் நின்றிருந்தனர். எல்லோரும் என்னை அன்புடனும் மரியாதையுடனும் உள்ளே அழைத்து சென்றனர்.
அங்கே இருந்த அறையில் விஜயகாந்த் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்து கொண்டிருந்தார். அவரை சுற்றி அவ்வளவு பத்திரிக்கை நிருபர்கள் இருந்தனர். என்னை பார்த்ததும் விஜயகாந்த் சார் பேட்டியை அப்படியே நிறுத்திவிட்டு எழுந்து ‘சார் வாங்க சார்’ என கூப்பிட்டுவிட்டு அருகில் இருந்தவரை அழைத்து சாரை மேலே என் அறையில் உட்கார வை’ என சொன்னார். அத்தனை பேர் மத்தியில் பேட்டியை நிறுத்திவிட்டு என்னை கவுரவபடுத்திவிட்டார். எனக்கு கண்ணெல்லாம் கலங்கிவிட்டது. அதை எப்போதும் நான் மறக்கவே மாட்டேன்’ என உருக்கமாக பேசியிருந்தார்.
இதையும் படிங்க: அரசியலுக்கு வந்து காணாமல் போன தமிழ் நடிகர்கள்!.. சம்பாதிச்ச காசு எல்லாம் போச்சு!..