கலைஞர் அந்த நடிகைக்கு செய்த உதவி! அதே போல் முதல்வர் செய்யமாட்டாரா? மனைவிக்காக முறையிட்ட விக்ரமன்

by Rohini |
vikraman
X

vikraman

Director Vikraman: தமிழ் சினிமாவில் இன்று பெரிய பெரிய நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், சரத்குமார் போன்றவர்களுக்கு 90கள் காலகட்டத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்து நல்ல நிலைமைக்கு உயர்த்திய பெருமை இயக்குனர் விக்ரமனையே சேரும்.

ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறினார் விக்ரமன். ஆனால் இன்று அவர் எந்தவொரு படங்களையுமே இயக்குவதில்லை. அதற்கு பின்னணியில் பல சோகங்கள் நிறைந்திருக்கின்றன. விக்ரமனின் மனைவிக்கு உடல் நலம் சரியில்லாமல் படுத்தபடுக்கையாகவே இருக்கிறார்.

இதையும் படிங்க: இனிமே இப்படிதான் நடிக்கனும்… விஜய்க்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட சங்கீதா…

5 வருடங்களுக்கு முன்பாக முதுகுவலி ஏற்பட்டு வடபழனியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்திருக்கிறார் விக்ரமன். ஆனால் அங்கு கொடுத்த தவறான அறுவை சிகிச்சையால் விக்ரமனின் மனைவியால் நடக்க முடியாமல் போனதாம். கிட்டத்தட்ட 5 வருடங்களாக படுக்கையிலேயேதான் இருக்கிறாராம்.

இதன் காரணமாக விக்ரமன் மனைவியுடனேயே இருப்பதால் படங்களில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் பல சொத்துக்களை விற்றுத்தான் மனைவியின் சிகிச்சையை பார்க்கிறேன் என்றும் மாசத்திற்கு கிட்டத்தட்ட 4 லட்சம் வரை செலவாகிறது என்றும் கூறி வருத்தப்பட்டார்.

இதையும் படிங்க: பேபி டால் பார்பி டாலா மாறிடுச்சே! ப்யூட்டி ஏறுதோ இல்லையோ அது ஏறுது – அனிகா ரீசண்ட் க்ளிக்ஸ்

மேலும் யாரிடமும் உதவி என்று கேட்க கேவலமாக இருக்கிறது என்றும் கூறினார். ஆனால் கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி. உதயகுமார் போன்றோர்கள் தான் எனக்கு பக்கபலமாக இருந்தார்கள் என்றும் கூறியிருந்தார். மேலும் இந்த பேட்டியின் மூலம் இன்னொரு விஷயத்தையும் விக்ரமன் கூறினார்.

பூவே உனக்காக பட சமயத்தில் நடிகை விஜிக்கும் இதே பிரச்சினைதான் இருந்ததாம். அவரும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள அவருக்கும் தவறான சிகிச்சை கொடுத்து சில பல பிரச்சினைகள் ஏற்பட்டதாம். அந்த நேரத்தில் கலைஞர் முதல்வராக இருந்த சமயம் என்பதால் கலைஞர் தலையிட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டார் என்று விக்ரமன் கூறினார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவை பாக்கனும்னா கண்டிப்பா இத பண்ணனுமாம்! இல்லனா நடக்குறதே வேற – பிரபலம் சொன்ன தகவல்

அதே போல் என் மனைவி விஷயத்திலும் இப்போதைய நம் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு இதற்கு ஒரு நல்ல தீர்வை கொடுக்கனும் என கேட்டுக் கொண்டதோடு எனக்கு பணமில்லாமல் வேண்டாம். அதே மருத்துவமனை என் மனைவியை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தால் போதும். அதற்கான வழியை ஏற்படுத்தி தரவேண்டும் என கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டார் விக்ரமன்.

Next Story