Cinema News
‘சந்திரமுகி’யோடு மோதிய ஆர்யா படம்.. ரிசல்டை நினைச்சு விஷ்ணுவர்தன் செய்த காரியம்
அறிந்தும் அறியாமலும், பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இயக்குனராக திகழ்ந்தவர் விஷ்ணுவர்தன். நீண்ட வருடங்கள் கழித்து மீண்டும் தமிழில் அவர் உருவாக்கியுள்ள திரைப்படம் நேசிப்பாயா. இந்த படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக அது சம்பந்தமான பணிகளில் தற்போது விஷ்ணுவர்தன் ஈடுபட்டு வருகிறார் .
அஜித் நடித்த பில்லா படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து விஷ்ணுவர்தன் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இந்த தமிழ் சினிமாவில் விளங்கினார் .அந்த படத்தின் வெற்றிதான் மீண்டும் அவரை வைத்து ஆரம்பம் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு விஷ்ணுவர்தனுக்கு கிடைத்தது. அவர் முதன் முதலில் இயக்கிய படம் அறிந்தும் அறியாமலும். அந்தப் படம் எந்த நேரத்தில் எந்த சூழ்நிலையில் ஆரம்பிக்கப்பட்டது என்பதை பற்றி ஒரு பேட்டியில் விளக்கமாக கூறியுள்ளார் விஷ்ணுவர்தன்.
இதையும் படிங்க: புஷ்பா 2 நிகழ்ச்சியில் பொங்கிய தேவி ஸ்ரீ!.. எதுக்கு அப்படி பேசினாரு?!.. தயாரிப்பாளர் விளக்கம்..!
எப்படியாவது சினிமாவில் படம் பண்ண வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த விஷ்ணுவர்தனுக்கு தக்க நேரத்தில் உதவி செய்தவர் அவருடைய அப்பாவுடன் பிசினஸில் ஈடுபட்ட ஷான் என்ற நண்பர்தானாம்.அவர் விஷ்ணுவர்தனை அழைத்து என்னுடைய வருங்கால மனைவி படம் தயாரிக்க ஆசைப்படுகிறார். அவருடன் சேர்ந்து நீ படம் பண்ணு எனக் கூறியிருக்கிறார்.
அப்போதுதான் இவருக்கு ஒரு நம்பிக்கையே பிறந்ததாம் .தயாரிப்புக்கு ஒரு ஆள் கிடைத்துவிட்டது .அடுத்ததாக தனக்கென ஒரு டீம் அமைத்து படத்திற்கான வேலைகளை ஆரம்பித்திருக்கிறார். அதன் பிறகு ஆர்யாவை சந்தித்து பேசி இந்த படத்தில் நடிக்க வேண்டும் எனக் கூற அதற்கு ஆர்யா ‘மச்சான் என்ன வச்சா படம் எடுக்க போற? ஒரு ராசியில்லாத நடிகர்னு என்ன சொல்லிக்கிட்டு இருக்காங்க’ என கூறியிருக்கிறார்.
இருந்தாலும் விஷ்ணுவரதன் அதையெல்லாம் விட்டுவிட்டு ஆர்யாவை நடிக்க அழைத்திருக்கிறார். அந்த படத்தில் பிரகாஷ்ராஜ் நடித்த கேரக்டருக்கு யாருமே சம்மதிக்கவில்லையாம். கடைசியாகத்தான் பிரகாஷ்ராஜிடம் கதையை சொல்லி அவரிடமும் ஓகே வாங்கி இருக்கிறார். இப்படித்தான் இந்த படம் ஆரம்பித்து இருக்கிறது. படம் எல்லாம் முடிந்து முதல் நாள் ரிவ்யூ ஷோ போட படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் யாருமே படத்தை வாங்க முன்வரவில்லையாம்.
இந்த படத்தின் தயாரிப்பாளரும் அதாவது இவருடைய அப்பாவின் நண்பரான ஷானும் படத்தை பார்த்து அவருக்கும் திருப்தி இல்லாமல் தான் இருந்திருக்கிறது. சரி எப்படியாவது வாங்கிய பணத்தை அவரிடம் திருப்பி கொடுக்க வேண்டும் என்ற ஒரு காரணத்தினால் என்ன செய்வதென்று தெரியாமல் விஷ்ணுவர்தன் முழித்திருக்கிறார். இந்த படம் ரிலீஸ் ஆன அதே நேரத்தில் தான் ரஜினியின் சந்திரமுகி திரைப்படமும் ரிலீஸ் ஆகி இருக்கிறது .
இதையும் படிங்க: சமரச பேச்சுவார்த்தை!.. நேரில் ஆஜரான ஜெயம் ரவி-ஆர்த்தி ரவி?!… மீண்டும் இணையுமா இந்த ஜோடி?…
தேவி தியேட்டரில் தான் இரண்டு படங்களும் ரிலீஸ் ஆனதாம். விஷ்ணுவர்தன் தன்னுடைய படத்தை முதல் நாள் தன் குடும்பம் அனைவரும் பார்க்க வேண்டும் என்ற காரணத்தினால் மொத்தமாக டிக்கெட்டுகளை வாங்கி எல்லோரிடமும் கொடுத்துவிட்டு இவர் மட்டும் சந்திரமுகி படத்தை பார்க்க போய்விட்டாராம். அதற்கு காரணம் தன் படத்தின் ரிசல்ட்டை நினைத்து என்ன ஆகுமோ என்ற ஒரு பயத்தினால் சந்திரமுகி படத்தை பார்த்துக்கொண்டு ரஜினியின் நடிப்பை பார்த்து கைத்தட்டி சிரித்துக்கொண்டிருந்தாராம்.
வெளியில் வந்து பார்க்கும் பொழுது அறிந்தும் அறியாமலும் படத்திற்கு கூட்டமே இல்லையாம். ஒரு வாரம் இப்படியே போக சரியாக ஒரு வாரம் கழித்து தான் அந்த படம் சூடு பிடித்திருக்கிறது .குறிப்பாக தீப்பிடிக்க தீப்பிடிக்க என்ற பாடல். அந்தப் படத்தை பார்க்க அனைவரும் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினார்களாம் .100 நாட்களைக் கடந்து அந்த படமும் மாபெரும் வெற்றி அடைந்ததாக விஷ்ணுவர்தன் கூறினார்.