80களில் குடும்பப் பாங்கான படங்களில் தெறிக்க விட்ட விசு... எப்படி நடந்ததுன்னு தெரியுமா?
நடிகர் விசு ஒரு சிறந்த நடிகர், இயக்குனர், எழுத்தாளர், பேச்சாளர். இவரது படங்கள் என்றாலே அதில் குடும்பங்களின் அன்றாடம் நடக்கும் பிரச்சனைகளும் அதற்கான தீர்வும் தான் வரும். அதனால் விசு படங்களுககு தாய்க்குலங்களின் பேராதரவும் இன்று வரை உண்டு. அவர் படங்களைளப் பார்த்தே குடும்பங்களில் நடந்த பல சிக்கல்கள் தீர்ந்துள்ளனவாம்.
மணல் கயிறு, குடும்பம் ஒரு கதம்பம், வேடிக்கை என் வாடிக்கை, டௌரி கல்யாணம், சம்சாரம் அது மின்சாரம், பெண்மணி அவள் கண்மணி போன்ற படங்களைப் பார்த்தாலே தெரிந்து விடும்.
இதையும் படிங்க... வறுமையில் வாடும் விஜயகாந்த் சகோதரர்கள்! ஊருக்கே உதவியவர் – அவர் தம்பிகளுக்கு இப்படி ஒரு நிலைமையா?
விசு படங்களின் உள்ள இன்னொரு சிறப்பு என்னவென்றால் அவரது கதாபாத்திர தேர்வு ரொம்பவே அருமையாக இருக்கும். கதைகளத்துடன் ஒன்றிப்போகும் கதாபாத்திரங்களாகவே நடிகர்கள் மாறிவிடுவர். இன்னொன்று வசனம். அவரது படங்களில் வசனங்கள் ஆணி அடித்தாற் போல நச் ந்சென்று இருக்கும்.
பெண்கள் பற்றி அவர் படம் எடுக்கும்போது ஒரு தந்தை மகளைப் பார்க்கும் பார்வையில் தான் எடுப்பார். விசுவால் எப்படி சராசரி குடும்பத்துக்குள் நடக்கும் சுவாரசியமான விஷயங்களைக் கொண்டு வர முடிகிறது? இதற்கு அவரே ஒரு பேட்டியில் பதில் தெரிவித்துள்ளார்.
நான் கதையை சுவாரசியமாக்க இரு நேரெதிர் கேரக்டர்களைக் கொண்டு வருவேன். ஒரு அடங்காப்பிடாரி பணக்கார மருமகளுக்கு ஜோடி ஒரு அப்பாவி. பயந்த நல்ல ஏழையான மாமியார் ஒரு பக்கம் என்றால் அவருக்கு அடக்கமான குணமான மருமகள். ஆனால் அவருக்கோ பணத்திமிர் பிடித்த மோசமான மாமியார். இந்த நால்வரையும் இணைக்கும் கதாபாத்திரத்தில் தான் விசு வருவார்.
இதையும் படிங்க... யார்கிட்ட இருந்து வேணுனா தப்பலாம்! ப்ளூ சட்டை மாறன்கிட்ட முடியுமா? சிவகார்த்திகேயனை கிழித்து தொங்கவிட்ட பதிவு
கதையில் ஒரு எக்ஸ்ட்ரா கேரக்டர் கூட வைப்பார். அந்த கேரக்டர் படத்தின் சக்ஸஸ் காரணமாகவே சேர்க்கப்பட்டு இருக்கும். உதாரணத்திற்கு சம்சாரம் அது மின்சாரம் படத்தில் வரும் மனோரமா கதாபாத்திரத்தைச் சொல்லலாம்.
80களில் தமிழ்நாட்டில் குடும்பங்கள் எப்படி இருந்தன என்பதை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருப்பார் விசு. நடுத்தர வர்க்கத்து அண்ணன் தங்கைக்கு கல்யாணம் செய்து வைக்கும் கதை. இப்போது பெண்கள் கண்டிஷன் போடுவது போல அந்தக்காலத்தில் கல்யாணத்திற்கு ஆண்கள் கண்டிஷன்கள் போட்டார்கள். திருமணத்திற்குப் பிறகு நடக்கும் களேபரங்கள் தான் கதை. இவ்வாறு தெரிவித்துள்ளார் விசு.