பிளாஷ்பேக்: ஹீரோயின் அவருதான்… தயாரிப்பாளரிடம் முரண்டு பிடித்த இயக்குனர்… சிவாஜி சொன்னது என்ன?

by sankaran v |   ( Updated:2025-04-05 03:46:29  )
sivaji
X

sivaji

இயக்குனர் திலகம் என்று அழைக்கப்படுபவர் கேஎஸ்.கோபாலகிருஷ்ணன். இவர் கதை எழுதிய படிக்காத மேதை படம் சிவாஜியின் நடிப்பில் ஆகச்சிறந்த படங்களில் ஒன்று. இந்தப் படத்துக்கு கதாநாயகியாக சௌகார் ஜானகியை விட்டால் வேறு யாரும் கிடையாது என்ற முடிவில் இருந்தார் இயக்குனர். அவர் கதை எழுதும்போதே சௌகாரை மனதில் வைத்துத் தான் எழுதினாராம்.

அன்பு, பண்பு, பாசம் எல்லாம் கொண்ட கதாபாத்திரம் அது. அதனால்தான் அவரைத் தேர்ந்தெடுத்துள்ளார். அதனால் படத்தயாரிப்பாளர் கிருஷ்ணசாமியிடமும் அந்தக் கருத்தைத் தெரிவித்தார். அவரும் சரி சரி என்று சொன்னார். ஆனால் அதை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இல்லை.

சரோஜாதேவி, சாவித்திரி, பத்மினி என இவர்களில் யாராவது நடித்தால் நல்லாருக்கும் என்பதுதான் படக்குழுவினரின் எண்ணமாக இருந்தது. அதேநேரம் இயக்குனரோ இவர்களில் யாரைப் போட்டாலும் இந்தப் படத்துக்கு வசனமே எழுதுறது இல்ல என்ற முடிவோடு இருந்தாராம்.

அந்த வகையில் அவரது முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்தப் படத்தில் சௌகார் ஜானகி இடம்பெற்றார் என்றால் அதுக்கு முக்கியமான காரணம் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். அந்தவகையில் அவரிடமும் மேற்கண்ட நடிகைகளை சிபாரிசு செய்தனர். சிவாஜியும் சௌகார் ஜானகிதான் என்று சொல்லிவிட்டாராம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.

padikkatha methai ks gopalakrishnan1960ல் ஏ.பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி நடித்த படிக்காத மேதை படம் வெளியானது. இதில் அவருடன் இணைந்து எஸ்.வி.ரங்கராவ், கண்ணாம்பா, சௌகார் ஜானகி உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். கே.வி.மகாதேவன் இசையில் பாடல்கள் 10. அத்தனையும் முத்து.

ஆடிப்பிழைத்தாலும், எங்கிருந்தோ வந்தான், இன்ப மலர்கள், ஒNரு ஒரு ஊரிலே, படித்ததினால் அறிவு பெற்றோர், சீவி முடிச்சு, பக்கத்திலே கன்னிப் பெண், உள்ளதைச் சொல்வேன், விந்தையினும் ஆகிய பாடல்கள் உள்ளன. இவற்றில் எங்கிருந்தோ பாடல் 2 தடவை வரும். சீர்காழி கோவிந்தராஜன் ஒரு தடவை பாடியிருந்தார். இன்னொரு தடவை டிஎம்எஸ். பாடியிருந்தார்.

Next Story