500 ரூபாய் கடன் வாங்க சென்றவருக்கு அடிச்ச லக்… விஜய் படத்துக்கே கதை எழுதிட்டாரே!

vijay
சந்தர்ப்பம் ஒருத்தரைத் தேடி வரணும்னா எப்படி எல்லாம் வரும் என்பதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம். புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன்தேடிய சீதை என பல படங்களை இயக்கியவர் ஜெகன். ஒரு காலகட்டத்தில் உதவி இயக்குனராக இருந்தவர். அப்போது வறுமையின் உச்சத்தை அனுபவித்தவர். அடுத்த வேளை உணவுக்குக் கூட கையில் காசு இல்லை. அப்போது ரோஜா கம்பைன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிய தனது நண்பரைப் பார்க்கச் சென்றாராம்.
அப்போதுள்ள சூழலில் ஒரு 500 ரூபாயாவது வாங்கி விட வேண்டும் என்றுதான் நினைத்தாராம். அதேநேரம் ரோஜா கம்பைன்ஸ் காஜா மொகைதீன் விஜய்க்காக கதைத் தேடிக் கொண்டு இருந்தாராம். அவர் ஜெகனின் நண்பரிடம் கேட்டுள்ளார். அப்பொது ஜெகனின் நண்பர் ஜெகனைப் பார்த்ததும், உங்க நண்பர்கள் யாரிடமாவது கதை இருக்கான்னு கேட்டாராம். அதற்கு என்னிடமே கதை உள்ளதுன்னு சொல்லி இருக்கிறார்.
உடனே காஜா மொகைதீனைத் தொடர்பு கொள்ளச் செய்தார். அந்தக் கதை காஜாமொகைதீன், எஸ்.ஏ.சந்திரசேகர் எல்லாருக்கும் கதை பிடித்து விடுகிறது. உடனே மௌரியா ஓட்டலில் ரூம் போட்டு கதை எழுத வைத்தாராம் காஜா மொகைதீன். அது மட்டுமல்ல. கதை எழுத 50 ஆயிரம் ரூபாயையும் முன்பணமாகக் கொடுத்தாராம்.
500 ரூபாயைக் கடனா கேட்க வந்தவருக்கு அடிச்ச லக்கைப் பார்த்தீர்களா? காலம் ஒருவருக்கு எப்படி வாய்ப்பு வழங்குகிறது என்பதற்கு இதுதான் உதாரணம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.
2003ல் கே.பி.ஜெகன் கதை எழுதி இயக்கிய படம் புதிய கீதை. விஜய், மீரா ஜாஸ்மின், அமீஷா பட்டேல், கலாபவன் மணி, கருணாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படத்தின் பின்னணி இசையை அமைத்தவர் கார்த்திக் ராஜா. படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.