Cinema History
அந்த ஹீரோவை ரவுடியை வச்சு தூக்கிட்டு வந்த இயக்குனர்… விவேக்கே ஜெயிலுனு சொன்னது இவரை தானாம்!…
Director: தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் தங்கள் படத்துக்காக உழைப்பது ஒருரகம் என்றால் சண்டை செய்தாவது தங்கள் படங்களை முடித்து கொடுப்பது ஒரு ரகம். அப்படி ஒரு ரகமாக தான் இயக்குனர் வி சேகர் இருந்தார்.
தமிழ்சினிமாவில் 90களில் இயக்குனராக அறிமுகமானவர் வி சேகர். கோலிவுட்டில் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி வைத்திருந்தார். ஒரே படத்தில் மூன்று நாயகிகள் மூன்று நடிகர்கள் என அவரின் எல்லா படங்களும் உருவாகி இருந்தது பலரை ஆச்சரியப்பட வைத்தது.
இதையும் படிங்க: கண்ணதாசனுக்கு வந்த காதல்!.. பாடல் வரிகளில் இறக்கிய கவிஞர்!.. அட அந்தப் பாடலா?..
அது மட்டுமில்லாமல் நடிகர்களிடம் 10 நாள், 15 நாள் மட்டும் கால்ஷீட் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்க மாட்டாராம். ஒரு நடிகரிடம் இருந்து குறைந்தபட்சம் அம்பதில் இருந்து 60 நாட்கள் வரை கால்ஷீட் வாங்கி விடுவாராம். வேறு படத்துக்கு சென்று அதனால் தன்னுடைய படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தவர்.
பொதுவாக இவரை நடிகர் விவேக் இது ஒரு ஜெயில்? தான் வந்து மாட்டிக்கிட்டேன் என விளையாட்டாக சொல்வதும் வழக்கமாம். ஏனெனில், 90களில் விவேகின் கால்ஷீட் அதிகமா வாங்கியது இயக்குனர் வி சேகர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய படத்தில் கறாராக இருப்பார் என்பதற்கு அவரே ஒரு விஷயத்தை சொல்லி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: வடிவேலுக்கு நன்றின்னு ஒன்னு இருந்திருந்தா அதை செய்திருக்கணும்!.. போட்டு பொளக்கும் பிரபலம்!..
வி சேகரும் உடம்பு சரி இல்லை என்பதால் லீவும் கொடுத்து விட்டாராம். ஆனால் நடிகர் விக்னேஷ் இந்த பத்து நாளை இன்னொரு படத்திற்காக வாங்கி அதில் நடித்துக் கொண்டிருந்திருக்கிறார். இந்த விஷயம் இயக்குனர் காதுக்கு செல்ல தன்னுடைய தயாரிப்பாளர் அழைத்தாராம்.
உடனே பத்து ரவுடிகளை ரெடி செய்யுங்கள் எனக் கூறுகிறார். அவர்களை ஒரு காரில் அழைத்துக் கொண்டு குறிப்பிட்ட அந்த ஷூட்டிங் இருக்கு சென்ற விக்னேஷை தூக்கி வந்து தன்னுடைய படப்பிடிப்பில் கலந்து கொள்ள வைத்தாராம். 60 நாட்கள் என் படத்தை முடித்துவிட்டு நீ எங்க வேணாலும் போ என கறார் இயக்குனராக இருந்திருக்கிறார்.
இதையும் படிங்க: ரஜினி வீட்டு வாசலில் தினமும் 20 பேர் நிப்பாங்க… அதுக்கு காரணம் என்ன தெரியுமா? உண்மையை உடைத்த பிரபலம்…