More
Categories: Cinema News latest news

வடிவேல வச்சி படமெடுத்து என் சோலியே முடிஞ்சு போச்சி!.. புலம்பி தள்ளும் இயக்குனர்…

வடிவேலு தமிழ் சினிமா காமெடி நடிகர்களில் ஒருவர். இவர் என் தங்கை கல்யாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் சின்ன கவுண்டர், சிங்கார வேலன், தேவர் மகன் போன்ற திரைப்படங்களின் மூலம் மக்களிடையே பிரபலமானார்.

அதன்பின் ப்ரண்ட்ஸ், தவசி, பகவதி போன்ற திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி இடத்தை சம்பாதித்தார். இவரின் காமெடி நடிப்பின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தையும் பிடித்தார். இவரின் காமெடிகளுக்கு சிரிக்காதவர்கள் இருக்கவே முடியாது.

Advertising
Advertising

இதையும் வாசிங்க:எல்லாரையும் வச்சு செய்ற பாலாவையே கதற விட்ட சம்பவம்!… இப்படியா பழிவாங்குவீங்க!..

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவரின் காமெடிகளை ரசிக்காதவர்கள் கிடையாது. போக்கிரி, கருப்பசாமி குத்தகைதாரர் போன்ற திரைப்படங்களில் இவரின் காமெடிகள் வயிறு வலிக்க செய்யும்படி வேடிக்கையாக இருக்கும். இவரின் காமெடி வசனங்களை மக்கள் தங்களது நிஜ வாழ்விலும் உபயோகப்படுத்தும் அளவிற்கு இவரின் வசனங்கள் பிரபலமானது.

காமெடி நடிகராக இருந்த வடிவேலு தனது காமெடியான கதாபாத்திரத்திலேயே இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, எலி, தெனாலிராமன் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இத்திரைப்படங்கள் இவருக்கு ஓரளவு வெற்றியை தேடி தந்தன. எலி, தெனாலிராமன் போன்ற திரைப்படங்களின் மூலம் இவர் எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றார். இவர் சமீபத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம்தான் மாமன்னன். இத்திரைப்படத்தில் இவருடன் உதயநிதி, கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தனர். இப்படம் இவருக்கு வெற்றியை தழுவி தந்தது. நல்ல வசூலையும் சம்பாதித்தது.

இதையும் வாசிங்க:பல மாசம் ஆகியும் கிளைமேக்ஸ் வரல!.. காக்க வைத்த இயக்குனர்!.. தூக்கியெறிந்த அஜித்!..

இவரது நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் எலி. இத்திரைப்படத்தினை இளம் இயக்குனரான யுவராஜ் தயாளன் இயக்கினார். இத்திரைப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக சதா நடித்திருந்தார். இப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது. இப்படத்தின் அனுபவத்தை இப்படத்தின் இயக்குனரான யுவராஜ் தயாளன் சமீபத்தில் பகிர்ந்தார்.

எலி பட ரிலீஸுக்கு பின் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் பொழுது வடிவேலு இயக்குனரிடம் படம் எவ்வாறு இருந்தது என பத்திரிக்கையாளர்களிடம் கேட்குமாறு கூறியுள்ளார். இயக்குனரும் கேட்க அங்கிருந்தவர்கள் அமைதியாக இருந்துள்ளனர். இயக்குனருக்கு தனது படத்தினை பற்றிய விமர்சனத்தை அந்த அமைதியால் புரிந்து கொள்ள முடிந்ததாம்.

மேலும் அவர் கூறுகையில் இந்த மாதிரியான அமைதியை அவர் பாலாவின் நான் கடவுள், மிஷ்கினின் அஞ்சாதே போன்ற படங்களின் விமர்சனங்களுக்கு பார்த்துள்ளாராம். மேலும் ஒன்று மிகவும் பிரம்மாண்ட படங்களுக்கு இவ்வாறு அமைதி இருக்கும். மற்றொன்று தரமில்லாத திரைப்படங்களுக்கு இருக்கும் என தெரிவித்தார். இவர் தன்னை இரண்டாவது ரகம் என எண்ணி கொண்டு அங்கிருந்து சென்று விட்டாராம்.

பின் தான் அப்படம் பண்ணியதை எண்ணி மிகவும் மனமுடைந்ததாகவும் தன்னால் ரசிகர்களின் 3 மணிநேரம் வீணானதை எண்ணி அடுத்து எந்த ஒரு படத்தையும் இயக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார். இதனால் தனது தூக்கத்தை தொலைத்த யுவராஜ் 8 ஆண்டுகளுக்கு பின்  தற்போது இறுகபற்று எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படமாவது இவருக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் வாசிங்க:அல்ட்ரா லெவலில் ரெடியாகி இருக்கும் லியோ ஆடியோ ரிலீஸ் அறிவிப்பு வீடியோ…! வைரலாக்கும் விஜய் ஃபேன்ஸ்..

Published by
amutha raja

Recent Posts