தரமான கோலிவுட் இயக்குனர்கள் யார் யார்… எவ்வளவு படம் இயக்கி இருக்கிறார்கள் தெரியுமா?

Published on: June 30, 2023
---Advertisement---

தமிழ் திரைப்படத்தை பொருத்தவரை இயக்குனர்களின் ஆதிக்கத்தின் மூலம் வளர்ந்த நடிகர்கள் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். அந்த வரிசையில் தரமான  கோலிவுட் இயக்குனர்கள் யார் யார் அவர்கள் எவ்வளவு படம் இயக்கி இருக்கிறார்கள் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இதில் முதலாவது ஆக வரும் இயக்குனர் பாலு மகேந்திரா இவர் இயக்கிய படங்கள் 24 இவரை அடுத்து இயக்குனர் பாரதிராஜாவை கூறலாம். இவர் இயக்கிய படங்கள் 43 மேலும் இவர் 12 படங்களுக்கு எழுத்தாளராக வேலை செய்து இருக்கிறார்.

Sunder Rajan
Sunder Rajan

தளபதி விஜயின் அப்பா இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இதுவரை 65 படங்களை இயக்கி 9 படங்களை தயாரித்திருக்கிறார். இவரை அடுத்து இயக்குனர் சுந்தரராஜன் 25 படங்களை இயக்கியதோடு மூன்று படங்களில் எழுத்தாளராக பணி புரிந்திருக்கிறார்.

பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்டமான வரலாற்று காவியத்தை தமிழர்களுக்கு பரிசளித்த இயக்குனர் மணிரத்தினம் இதுவரை 27 படங்களை இயக்கியிருக்கிறார் அது மட்டுமல்லாமல் 34 படங்களில் எழுத்தாளராக பணி புரிந்த இவர் 26 படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார்.

பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் ஜென்டில்மேன் ஷங்கர் இதுவரை 13 படங்களை இயக்கி 12 படங்களில் எழுத்தாளராக பணி புரிந்திருக்கிறார். மேலும் இவர் சொந்தமாக பத்து படங்களை தயாரித்தும் வெளியிட்டு இருக்கிறார்.

இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் இதுவரை 20 படங்களை இயக்கி இருப்பதோடு ஏழு படங்களை தயாரித்தும் இருக்கிறார். மேலும் வித்தியாசமான கதை களத்தில் தனது அபார திறமையை நிரூபித்து வரும் இயக்குனர் பாலா இதுவரை 9 திரைப்படங்களை இயக்கி ஆறு திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார் அது மட்டும் அல்லாமல் எழுத்தாளராக 8 படங்களில் வேலை செய்திருக்கிறார்.

Ameer Sultan
Ameer Sultan

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் 43 படங்களை தயாரிக்க இருப்பதோடு மூன்று படங்களை தயாரித்து ஒரு படத்தில் எழுத்தாளராக பணிபுரிந்து இருக்கிறார். இயக்குனர் சமுத்திரக்கனி 14 படங்கள் மட்டுமே எடுத்திருக்கிறார் இவர் தற்போது நடிப்பிலும் கலை கட்டி வருகிறார்.

இயக்குனர் அமீர் அவர்கள் இதுவரை நான்கு படங்களை இயக்கியதோடு இரண்டு படங்களை தயாரித்து ஐந்து படங்களுக்கு எழுத்தாளராக பணி புரிந்திருக்கிறார். இயக்குனர் வெற்றிமாறன் இதுவரை ஏழு திரைப்படங்களை இயக்கி 13 திரைப்படங்களை தயாரித்த இவர் ஒன்பது திரைப்படங்களில் எழுத்தாளராக பணியாற்றிய அனுபவம் நிறைந்தவர்.

Brindha

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.