பாரதிராஜாவுக்கு இப்படி ஒரு காதல் கதையா? மனைவி தெரிஞ்சு என்ன பண்ணாங்க தெரியுமா?
Bharathiraja: தமிழ் சினிமாவில் பாசத்துக்குரிய இயக்குனராக கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக ரசிகர்களின் அன்பையும் பாராட்டையும் பெற்ற இயக்குனராக இருப்பவர் பாரதிராஜா. 16 வயதினிலே படத்தின் மூலம் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமான பாரதிராஜா முதல் படத்தில் தனது அபார வெற்றியை பதிவு செய்தார்.
அதுவும் அவர் எடுக்கும் பெரும்பாலான படங்களில் புதுமுகங்களை வைத்தே தான் படத்தை எடுப்பார். அதிலும் அவர் வெற்றியை காண்பவர். அலைகள் ஓய்வதில்லை, கிழக்கே போகும் ரயில் போன்ற படங்களை பார்க்கும் போது இப்படியும் ஒரு காதல் கதையா என்று ரசிகர்களை பிரமிக்க வைக்கும்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதியை தூக்கிட்டு சூரிய போடு!.. வெற்றிமாறன் போட்ட ஸ்கெட்ச்!..
இப்ப உள்ள காதல் மாதிரி கிராமத்து காதல் கதைகள் இருக்காது. கிராமத்து காதல் கதைகள் என்றாலே அதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கும். காதலன் காதலிக்காக குளத்துங்கரை பக்கமோ அல்லது ஆற்றங்கரை பக்கமோ காத்துக் கொண்டிருப்பது, மறைந்திருந்து இருவரும் பேசுவது, ஒருவரையொருவர் அன்பை பரிமாறுவது என பாரதிராஜா தன் படங்களில் முழுக்க காதலை சொட்ட சொட்ட காட்டியிருப்பார்.
இப்படி காட்டிய பாரதிராஜாவுக்குள்ளும் ஒரு அழகான காதல் கதை ஒளிந்திருக்கிறது. சிறு வயதில் இருக்கும் போதே பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியை ஒரு தலையாக காதலித்தாராம் பாரதிராஜா. முதல் காதல் என்றுமே அழியாது என்று சொல்வதை போல் அந்த காதலியை இன்று வரை நியாபகம் வைத்து கண்ணீர் மல்க கூறினார்.
இதையும் படிங்க: ஒரு சின்ன சீன் கொடுத்துட்டு அட்ஜெஸ்மெண்ட் கேட்டான் அவன்!.. நடிகை பகீர் பேட்டி!.
தன் காதலியை பார்த்து அடிக்கடி சைட் அடிப்பாராம். குளிக்கும் போது சிறு வயதில் ஒளிந்திருந்து பார்ந்திருக்கிறாராம். எப்பொழுதும் அந்த காதலியின் நினைப்பிலேயேதான் இருப்பாராம். ஆனால் தன் காதலை அந்த பெண்ணிடம் சொல்லவே இல்லையாம். அதன் பிறகு காலங்கள் ஓடி சென்னைக்கு வாய்ப்பிற்காக வந்திருக்கிறார்.
ஒரு நாள் அவர் சொந்த ஊருக்கு போகும் போது அந்த பெண் பாரதிராஜாவின் வீட்டுக்கு வந்து அவர் அம்மாவை சந்தித்து பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது அந்த பெண்ணே டீ போட்டு பாரதிராஜாவுக்கு கொடுத்தாராம். அப்பொழுதுதான் அந்த பெண்ணின் குரலையே சரியாக கேட்டாராம் பாரதிராஜா. டீ வாங்கியதும் இந்த உலகமே எனக்கானது என நினைத்தாராம் பாரதிராஜா.
இதையும் படிங்க: நடுஇரவில் விஜய் செய்த அந்த சம்பவம்… தளபதி இந்த விஷயத்தில கில்லாடிதான்!..
அதன் பிறகு ஒரு நாள் ரோட்டோரம் தலைமுடி நரைத்து ஒரு பெண் நின்று கொண்டிருக்க அது தான் காதலித்த பெண் என பாரதிராஜா சரியாக கணித்துவிட்டாராம். பாரதிராஜாவை பார்த்து அந்த பெண்ணும் நேராக வர ஒரு பத்திரிக்கையை கையில் கொடுத்து தன் பேத்திக்கு சடங்கு வைத்திருப்பதாக கூறினாராம்.
மேலும் அந்த பெண்ணின் மகள் மற்றும் பேரப் பிள்ளைகளுக்கு பாரதிராஜாதான் கொஞ்ச நாள் வேலை கொடுத்து உட்கார வைத்திருக்கிறார். ஆனால் இது வரை தன்னை பாரதிராஜா காதலிக்கிறார் என அந்த பெண்ணுக்கு தெரியவே தெரியாதாம். ஆனால் பாரதிராஜா வேலைக்கு வந்த அந்த பெண்ணின் மகள் மற்றும் பேரப்பிள்ளைகளிடம் உங்கள் பாட்டியை சைட் அடித்து காதலித்தேன் என்ற உண்மையை கூறினாராம்.
அவர்களுக்கு ஒரே ஆச்சரியம். ஆனால் இதை உங்கள் பாட்டியிடம் சொல்ல வேண்டாம் என பாரதிராஜா சொல்லிவிட்டாராம். மேலும் இந்த கதை எல்லாம் என் மனைவிக்கு தெரியும். தெரிந்து கொண்டு அவ்வப்போது ‘ஊரெல்லாம் போய் மேய்ந்தவர்தானே நீங்கள்’ என கூறி சண்டை போடுவாராம் பாரதிராஜாவின் மனைவி.