அந்தக் காதல்ல மணிக்கணக்காக் காத்திருக்குறது கூட தெரியாது....யாரை சொல்கிறார் செல்வராகவன்..?
தமிழ்சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர் செல்வராகவன். 2002ல் துள்ளுவதோ இளமை படத்தில் எழுத்தாளராக திரையுலகில் நுழைந்தார்.
அதன்பின் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், நெஞ்சம் மறப்பதில்லை, என்ஜிகே என வரிசையாக படங்களை இயக்கி தனக்கென தனி முத்திரையைப் பதித்தார்.
இவரைப் பற்றி இவரது தம்பி தனுஷ் சொல்லும்போது அண்ணன் படம் டைரக்ட் பண்ணும்போது ஒரு கண் சிமிட்டலைக் கூட மிஸ் பண்ண மாட்டாரு. அவ்ளோ பெர்பெக்டா பார்ப்பாருன்னு சொல்வார். சமீபத்தில் இவர் நடித்த பகாசூரன் படம் தமிழ்த்திரை உலகில் வெற்றி நடை போட்டு வருகிறது.
மோகன்ஜி இயக்கத்த்தில் வெளியாகி உள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பெற்றோர்களுக்கு பெரும் பாடமாகவும் இந்தப் படம் அமைந்துள்ளது என சொல்லப்படுகிறது. இப்போது படத்தின் நாயகன் செல்வராகவன் சினிமா பற்றியும், தனுஷ் பற்றியும், அவரது பிள்ளைகள் குறித்தும் என்னென்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
இயக்குனர் மோகன் சார் டான்ஸ் கண்டிப்பா ஆடணும்னு சொன்னாரு. டான்ஸ் மாதிரி வராது. சாமி மாதிரி தான் ஆடுவேன். அவங்களுக்கு திருப்தி வர்ற மாதிரி நாம நடிக்கணும். அதுதான் முக்கியம். பொண்ணுங்க உடம்பை வச்சித் தொழில் பார்க்குறதுன்னா யாரும் எதையும் விரும்பிப் பார்க்குறதில்ல.
பாவமா இருக்கு. இந்தப் படத்துல மோகன்ஜி காமிச்சவிஷயங்கள் எல்லாம் ரொம்ப ஷாக்கிங்கா இருக்கும். எல்லா பேரன்ட்ஸ்சும் படம் பார்த்தாங்கன்னா ரொம்ப அவேர்னஸா இருக்கும். அவர் சொல்ற கருத்து ரொம்ப முக்கியமானது. எல்லாருமே பார்க்கணும்.
புதுப்பேட்டை பிராசஸ்க்கு நான் பாம்பேல பார்த்தேன். வழியில்லனனு போறது ரொம்ப பிரச்சனையாகி மாபியா கேங் கிட்ட மாட்டி எல்லாமே நடக்குது. லவ் என்கிறது ஒவ்வொரு ஸ்டேஜ பொருத்து இருக்கு. 15, 16 வயசுல எல்லாம் கண்ணுலயே முடிஞ்சி போயிடும்.
நடக்கும்போது ஐ பால் திரும்பிக்கிட்டே போகும். அதுக்கு மணிக்கணக்காக் காத்திருக்குறது கூட தெரியாது. அப்புறம் தான் சுண்டுவிரலயே டச் பண்ண முடியும். அந்த லவ்வோட இது பியூர் மேஜிக் தான். அதுக்கு அப்புறம் வர்ற லவ் எல்லாமே தனிநபர்களை சார்ந்த விஷயம். சிலர் ரொம்பவே நம்மை ரசிக்க வைக்கிறாங்க.
தனுஷ் மகன்கள் யாத்ரா, லிங்கா பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார். அதுல லிங்கா பயங்கரமான விவரம். படம் நல்லாலைன்னா காரி துப்பிருவாங்க. என்ன படம் எடுத்துருக்க பெரியப்பான்னு சொல்வாங்க.
சரியா ஒத்துவரலன்னா ரொம்பல்லாம் சண்டையைப் போட்டுக்கிட்டு இருக்கக்கூடாது. பிரிஞ்சிடறது நல்லது. எனக்கு ரொம்ப ஆச்சரியம்...எதுக்குடா இதுக்கெல்லாம் போட்டு சூசைடு அட்டன்ட் பண்ணிக்கிறீங்க. இருக்கலாம். வலி இருக்கலாம். ஆனால் லைப் ரொம்ப பெரிசு. ஒரு ஒரு டைம் எல்லாருக்கும் புரியும். சரியா வரலன்னா என்ன பண்ண முடியும்? ரொம்பல்லாம் அதுக்கு பீல் பண்ணனும்னு தேவையில்லை.
மியூசிக் ரொம்ப பிடிக்கும். குழந்தைகளோட இருக்குறது தான் ரொம்ப பிடிக்கும். அது ஒரு தனி உலகம். லைப்னு வரும்போது போகப் போக மாற்றங்கள் தன்னால வரும். அதை தன்னால அக்சப்ட் பண்ணிக்கனும்.
செல்வராகவன் முதலில் நடிகை சோனியா அகர்வாலை மணந்து விவாகரத்து செய்தார். அதன் பிறகு தன்னுடன் பணிபுரிந்த உதவி இயக்குனர் கீதாஞ்சலியை மணந்து கொண்டார். இவருக்கு இருபிள்ளைகள் உள்ளனர்.