Connect with us

Cinema News

மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலு அடுத்தடுத்து மலையாள படங்களை மடக்கிய ஓடிடி நிறுவனம்!.. ரிலீஸ் எப்போ?..

நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், சோனி லைவ் உள்ளிட்ட ஓடிடி தளங்களுக்கு ஆப்பு வைக்கும் விதமாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் அடுத்தடுத்து பெரிய படங்களை அதுவும் ரசிகர்களுக்கு பிடித்த படங்களை ரிலீஸ் செய்து வருகின்றன.

கடந்த ஆண்டு பார்க்கிங் படத்தில் தொடர்ந்து, பிப்ரவரி மாதம் வெளியான லவ்வர் திரைப்படம் வரை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் அடுத்ததாக, வரும் ஏப்ரல் 5ம் தேதி ஹனுமான் தமிழ் மற்றும் மஞ்சுமெல் பாய்ஸ் படங்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளன.

இதையும் படிங்க: லால் சலாம் ஓடிடியில் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லையா?.. ரஜினிகாந்த் மகளால் அப்செட்டான லைகா நிறுவனம்?..

மேலும், ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பிரேமலு திரைப்படம் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகப் போவதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நஸ்லென் மற்றும் மமிதா பைஜு நடிப்பில் வெளியான காதல் காமெடி திரைப்படமான பிரேமலு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகப் போகிறது.

இதையும் படிங்க: 5 ஆயிரம் கோடியை இறக்கும் அஜித் படத்தின் தயாரிப்பாளர்!.. பிரம்மண்டமாக உருவாகும் 12 படங்கள்!..

இந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான மோகன்லால் நடித்த மலைக்கோட்டை வாலிபன், மஞ்சுமெல் பாய்ஸ் மற்றும் பிரேமலு உள்ளிட்ட படங்களை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் அழகாக மடக்கிப் போட்டுள்ளது.

மம்மூட்டி நடிப்பில் வெளியான பிரமயுகம் திரைப்படம் மட்டும் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் தளங்களில் வெளியான படங்கள் எல்லாமே படு மொக்கையான படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஏப்ரல் 5 இந்த வாரமும் அடுத்த வாரம் ஏப்ரல் 12ம் தியேட்டருக்கே போகாமல் ஓடிடியில் இந்த படங்களை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.

இதையும் படிங்க: விஜயகாந்தை வைத்து பல ஹிட்களை கொடுத்த சுந்தராஜன்! இவங்களுக்குள்ள இப்படி ஒரு பிரச்சினையா?

google news
Continue Reading

More in Cinema News

To Top