5 ஆயிரம் கோடியை இறக்கும் அஜித் படத்தின் தயாரிப்பாளர்!.. பிரம்மண்டமாக உருவாகும் 12 படங்கள்!..

திரைப்படங்களை தயாரிப்பது சாதாரண தொழில் இல்லை. நல்ல கதையை தேர்ந்தெடுப்பதில் இருந்து, அதற்கு நல்ல திறமையான இயக்குனர்களை தேர்ந்தெடுத்து, கதைக்கு தேவையான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களையும் தேர்வு செய்ய வேண்டும்.

திட்டமிட்ட தேதியில் படப்பிடிப்பை நடத்த வேண்டும். படப்பிடிப்பின் போது எந்த சிக்கல் வந்தாலும் சமாளித்து படப்பிடிப்பை நடத்த வேண்டும். ஒருபக்கம், சொன்ன பட்ஜெட்டை படம் தாண்டாதபடியும் பார்த்துக்கொள்ள வேண்டும். நடிகர்களை சமாளித்து முழுப்படப்பிடிப்பும் முடிக்க வேண்டும்.

இதையும் படிங்க: ரிலீஸ் தேதியை லாக் செய்த கோட் படக்குழு!.. குறுக்கே வரும் அந்த ஹீரோ!.. இதே வேலையா போச்சி!..

அதோடு நின்றுவிடுகிறதா என்றால் இல்லை. எல்லோருக்கும் சொல்லிய சம்பளத்தை கொடுக்க வேண்டும். இல்லையெனில் நடிகர்கள் டப்பிங் பேச வரமாட்டார்கள். போஸ்ட் புரடெக்‌ஷன் வேலை முடித்து முழுப்படத்தையும் உருவாக்க வேண்டும். அதன்பின் சரியான தேதியை திட்டமிட்டு சிக்கல் இல்லாமல் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும். ஒருபக்கம் ரிலீஸுக்கு ஒரு மாதம் இருக்கும்போது படத்தின் புரமோஷன் வேலைகளை செய்ய வேண்டும்.

அப்போதுதான் ரசிகர்களிடம் படம் ரீச் ஆகும். இப்படி பல படத்தயாரிப்பில் பல விஷயங்கள் இருக்கிறது. அதனால்தான் நல்ல அனுபவமுள்ள தயாரிப்பாளர்கள் மட்டுமே சினிமாவில் தொடர்ந்து நீடிக்க முடியும். தமிழி சினிமாவை பொறுத்தவரை பெரிய நடிகர்களை வைத்து படங்கள் எடுக்கும் தயாரிப்பாளர் மிகவும் குறைவு.

இதையும் படிங்க: தலைவர் 171 படத்தின் கதை இதுதான்… ரசிகனுக்காக ரஜினி செய்யப் போகும் தரமான சம்பவம்..

லைக்கா, ஏஜிஎஸ், கலைப்புலி தாணு, சன் பிக்சர்ஸ் என இந்த 4 தயாரிப்பாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். மற்ற தயாரிப்பாளர்கள் சின்ன ஹீரோக்களை வைத்து படங்களை தயாரித்து வருகிறார்கள். இந்நிலையில்தான் ஆந்திராவில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்கிற சினிமா தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டுக்களில் படங்களை உருவாக்கி வருகிறது.

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர், புஷ்பா மற்றும் புஷ்பா 2 ஆகிய படங்களின் தயாரித்ததும் இவர்கள்தான். அதோடு, விடாமுயற்சி படத்திற்கு பின் அஜித் நடிக்கவுள்ள குட் பேட் அக்லி படத்தையும் தயாரிக்கப்போவதும் இந்த நிறுவனம்தான். இந்நிலையில் 5 ஆயிரம் கோடியை முதலீடாக வைத்து தொடர்ந்து 12 படங்களை தயாரிக்க இந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

ராம்சரண் - சுகுமார் கூட்டணியில் ஒருபடம், ஜுனியர் என்.டி.ஆர் நடிக்க ஒரு படம், ஹிந்தியில் சில படங்கள் என 12 படங்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறது.

 

Related Articles

Next Story