ஒருத்தருக்கொருத்தர் இப்படி முட்டிக்கிட்டா என்னதான் பண்றது?? எம்.ஜி.ஆர். படத்தில் பிரபலங்களுக்குள் நடந்த களேபரங்கள்…
ஒரு திரைப்படம் உருவாகும்போது அத்திரைப்படத்தின் இயக்குனருக்கும் நடிகருக்கும் சிறு சிறு கருத்து மோதல்கள் ஏற்படுவது சகஜம்தான். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர் திரைப்படத்தின் உருவாக்கத்தின்போது அத்திரைப்படத்தில் பணியாற்றிய பல பிரபலங்களுக்கும் இடையே சண்டை நடந்ததாம். அவ்வாறு பல சண்டைகளுக்கு இடையே அத்திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இவ்வாறு பல சண்டைகளுக்கிடையே வெளியான அந்த எம்.ஜி.ஆர் திரைப்படம் குறித்து இப்போது பார்க்கலாம்.
1956 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், பானுமதி, பத்மினி, என்.எஸ்.கிருஷ்னன் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “மதுரை வீரன்”. இத்திரைப்படத்தை யோகானந்த் இயக்கியிருந்தார். கவிஞர் கண்ணதாசன் இத்திரைப்படத்தின் வசனங்களை எழுதியிருந்தார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் கண்ணதாசனுக்கும் இடையே கருத்து மோதலால் மிகப்பெரிய சண்டை ஏற்பட்டதாம். மேலும் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே சிறு சிறு சண்டைகளும் ஏற்பட்டதாம்.
இத்திரைப்படத்தை யோகனந்த் இயக்கியிருந்தாலும், இத்திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளையும் பாடல் காட்சிகளையும் இயக்கியவர் டி.ஆர்.ரகுநாத். ஆதலால் சில கருத்து வேறுபாடு காரணமாக அந்த இரு இயக்குனர்களிடையேயும் சண்டை வந்ததாம்.
இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய் ஏற்றுக்கொள்கிறாரா?? ரசிகர்களை விளாசித் தள்ளிய பிரபல தயாரிப்பாளர்…
“மதுரை வீரன்” திரைப்படத்தின் கிளைமேக்ஸ் எடுத்த விதத்தில் எம்.ஜி.ஆருக்கு துளி கூட விருப்பம் இல்லையாம். ஆதலால் அவருக்கும் அத்திரைப்படத்தின் இயக்குனர் யோகானந்த்துக்கும் சண்டை ஏற்பட்டதாம். இவ்வாறு இத்திரைப்படத்தில் பணியாற்றிய பல பிரபலங்களுக்கிடையே ஏற்பட்ட சண்டைகளுக்கு நடுவே “மதுரை வீரன்” திரைப்படம் வெளியாகியிருக்கிறது.