ஹீரோ பெயரை பாடல் வரிகளில் சொருகிய வாலி!.. இதுல செம கில்லாடி அவருதான்!..

Kamal meena
கேரளாவில் தமிழர்களை பாண்டி என்று அழைப்பார்கள். அது இழிவான சொல்லாக அங்கு நினைப்பார்கள். ஆனால் கவிஞர் வாலி பாண்டி என்ற சொல்லை மிகவும் புத்திசாலித்தனமாக பயன்படுத்தியுள்ளார். அதுவும் கமல் படம் தான். 1996ல் வெளியானது. அவ்வை சண்முகி. கே.எஸ்.ரவிகுமார் இயக்கியுள்ளார்.
படத்தில் கமலின் பெயர் பாண்டி. இவர் திரைப்பட நடன இயக்குனர். எப்படியோ பணக்கார பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் மீனாவை திருமணம் செய்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் கமலுக்கும், மீனாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுகின்றனர். கமல் எப்படியாவது முன்னாள் மனைவியான மீனாவுடன் பழக முயற்சிக்கிறார்.
இதையும் படிங்க... அடுத்தடுத்து 3 படங்கள்!.. ரஜினிக்கு உதவும் மந்திரங்கள்.. சீக்ரெட்டை வெளியே சொன்ன பிரபலம்…
அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தையை சாக்காக வைத்து வீட்டில் ஒரு வேலைக்காரி போல ஆன்ட்டி தோற்றத்துடன் நுழைகிறார் கமல். அங்கு நடக்கும் கலவரங்களே படத்தின் கதை. மீண்டும் இணைந்தார்களா என்பதை வெள்ளித்திரையில் காணலாம்.

Avvai Shanmughi
கமல் ஆன்ட்டி கேரக்டரில் செம மாஸாக மேக் அப் போட்டு அச்சு அசலாக மாமி போலவே நடித்து அசத்தியுள்ளார். படத்தில் அந்தக் கெட்டப்பின் பெயர் அவ்வை சண்முகி. இவர் பெண் குரலில் ஒரு பாடலைப் பாடுகிறார். அதை எழுதியவர் கவிஞர் வாலி.
ருக்கு ருக்கு ருக்கு என ஆரம்பிக்கும் இந்தப் பாடலின் இடையில் தூணுக்குள்ளும் இருப்பான்டி, துரும்பிலும் இருப்பான்டி, நம்பியவர் நெஞ்சில் நிற்பான்டி, குங்குமத்தை வைப்பான்டி, கொஞ்சி கொஞ்சி நிற்பான்டி.. என பாண்டி பாண்டி என வரும் அளவில் அந்தப் பெயரையும் இடையில் லாவகமாக சொருகியிருப்பார் கவிஞர் வாலி.
இதன் மூலம் மீனாவுக்கு தனது முன்னாள் கணவரான கமலை மறைமுகமாக நினைவூட்டுகிறார் கவிஞர் வாலி. இந்தப் பாடல் பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஜோடி சேர ஒரு திருப்புமுனையாக அமைந்தது.