மில்க் ஸ்வீட் போல கும்முன்னு இருக்க!..க்யூட் லுக்கில் இளசுகளை இழுக்கும் டிடி

சினிமா மூலமாகத்தான் பெண்கள் பிரபலமடைய முடியும் என்பதில்லை என்பதை நிரூபித்தவர் டிடி என அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி.
விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். அதிலும், இவர் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ளும் ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சி ரசிகர்களை கவர்ந்த ஒன்றாகும்.
தற்போது சினிமாவில் நடிப்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். சினிமா நிகழ்ச்சிகளை நடத்துவது என எப்போதும் தன்னை பிஸியாக வைத்துக்கொண்டிருக்கிறார். நடிகர் தனுஷ் தான் இயக்கிய பவர் பாண்டி படத்தில் இவரை நடிகையாக மாற்றினார். அதன்பின் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: கமல்ஹாசனுக்கு இளையராஜா போட்ட கண்டிஷன்… அந்த ஹிட் பாடல் உருவானது இப்படித்தான்… அடடா!!
ஒருபக்கம், அழகான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படம் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.