அஜித்தைப் புகழ்ந்த சத்யராஜ் மகள்… விஜயை எதுவும் சொன்னாரா? அப்படி சொல்லிருக்காரே..!

ajith divya vijay
Divya sathyaraj: நடிகர் சத்யராஜ் புரட்சித்தமிழன் என்ற அடைமொழியுடன் திரை உலகில் உலா வருகிறார். கமல், ரஜினி காலகட்டத்தில் இன்று வரை தாக்குப் பிடித்து வரும் நடிகர் என்றால் அது சத்யராஜ் தான். அவருக்கு என்று ஒரு தனி ஸ்டைல் இருக்கு. அதுதான் காரணம். அவரது மகள் திவ்யா சத்யராஜ். சமீபத்தில் திமுகவில் இணைந்துள்ள அவர் மேடைகளில் இப்போது பேசி வருகிறார்.
அவர் அஜித் குறித்து என்ன சொன்னார் என்று பார்க்கலாம். அதே போல அவரது மற்றொரு கருத்தைப் பார்க்கும்போது அது விஜய் கட்சியா என்றும் எண்ணத் தோன்றுகிறது. ஏன்னா அவர் புது கட்சி என்று சொல்லி இருக்கிறார். அப்படிப் பார்த்தால் புதுகட்சியை சமீபத்தில் ஆரம்பித்தவர் விஜய் தான். சரி. என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…
எனக்கு அஜித் சாரை ரொம்ப பிடிக்கும். நான் அவர் கூட போய் ஒரு போட்டோ எடுத்துட்டு, நாளைக்கு கொடூரமா, கேவலமா, ஒரு விஷயம் பண்ணா நீங்க தாராளமாக என்னை அரெஸ்ட் பண்ணலாம். ஆனா நீங்க அஜித் சார் கிட்ட போய், சார் நீங்க தான் தப்பு பண்ணினீங்களான்னு அவரை கேட்க கூடாது.
ஏனென்றால், அவர் ஒரு பிரபலம். அதே மாதிரி எங்க கட்சிக் கொடியை கார்ல வச்சிட்டு ஒருத்தர் தப்பு பண்ணா, அவங்க பண்ற தப்புக்கு எல்லாம் நாங்க தான் காரணம்னு நினைச்சீங்கன்னா அது முதிர்ச்சியற்ற விஷயம் என்கிறார் திமுக மேடையில் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ்.

என்னுடைய சோஷியல் மீடியால புது கட்சிகளில் இருந்து சில பேர் என்னை உருவ கேலிகள் செஞ்சாங்க. அதுக்கு நான் பெருசா கவலைப்படல. ஏனென்றால், நான் அழகா இருக்கிறேன் என்று என்னைக்குமே நினைத்தது கிடையாது. நான் அழகாக இருக்கிறேன் என்று சோஷியல் மீடியாவில் சொல்லணும் என்றும் எதிர்பார்த்தது கிடையாது. ஆனால், நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று பெருமையாக சொல்வேன் என்கிறார் திவ்யா சத்யராஜ்.