சத்தியராஜ் மகளுக்கு இப்படி ஒரு ஆசையா?... ஷாக் ஆன ரசிகர்கள்..

by சிவா |   ( Updated:2021-10-30 03:42:02  )
divya sathyaraj
X

தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து பின் கதாநாயகனாக மாறி தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் சத்தியராஜ். ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் அவர் ஏற்ற கட்டப்பா வேடம் அவரை இந்தியா முழுவதும் பிரபலமடைய வைத்தது.

இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகன் சிபிராஜ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மகள் திவ்யா. இவர் ஓரு உட்டச்சத்து நிபுணர் ஆவார். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

இதையும் படிங்க - சண்டாளி சகலத்தையும் காட்டி சாகடிக்குறாளே…. பலா பழம் சைஸ்ல பலே நடிகை!

இந்நிலையில், அவர் பதிவிட்டுள்ள ஒரு கருத்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. சிறுவயதில் நான் சரியாக சாப்பிட மாட்டேன். எனவே எனக்கு உணவை ஊட்ட என் அப்பாவும், அம்மாவும் எனக்கு பல கதைகளை கூறுவார்கள். என் தந்தை நெய் கலந்த ரசம் சாதம் மற்றும் பொரியலை ஊட்டுவார். அப்போது எனக்கு பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் பற்றிய கதைகளை கூறுவார். எனக்கு உணவு மற்றும் அரசியல் மீதான காதல் அப்போதுதான் துவங்கியது.

divya sathyaraj

எனவே, நான் வளரும்போது 2 குறிக்கோள்களை வைத்துக்கொண்டேன். ஒன்று நல்ல ஊட்டச்சத்து நிபுணராக மாறி ஆரோக்கியமான உணவு பற்றி மக்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக மாறி என் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என நினைத்தேன். முதல் ஒன்றை அடைந்து விட்டேன். தற்போது 2வது குறிக்கோளை அடைய கடினமாக உழைத்து வருகிறேன். அடுத்த லோக் சபா தேர்தலில் போட்டியிடுவேன்’ என பதிவிட்டுள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் அவரை பாராட்டுவதோடு அவரின் குறிக்கோள் நிறைவேற வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் திவ்யா சத்தியராஜ் போட்டியிடுவதாகவும், அவருக்கு ஆதரவாக சத்தியராஜ் பிரச்சாரம் செய்யவுள்ளதாவும் அப்போது செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

திவ்யாவின் குறிக்கோளை பார்க்கும் போது எதிர்காலத்தில் அவர் அரசியல்வாதியாக மாறுவார் என கணிக்கப்படுகிறது.

Next Story