Diwali Release: தமிழ் சினிமாவின் தீபாவளி ரிலீஸுக்கு எப்போதுமே ஒரு மவுஸ் இருக்கும். ஆனால் இந்த வருடம் டாப் ஸ்டார் யாரும் தீபாவளிக்கு இறங்கவில்லை. ஆனால் ஒரு தீபாவளி ரேஸில் ரஜினி, கமலையே ஒரு நடிகர் தூக்கி சாப்பிட்ட சம்பவம் நடந்து இருக்கிறது.
1981ம் ஆண்டு தீபாவளி ரேஸில் சிவாஜி கணேசன் நடிப்பில் ‘கீழ்வானம் சிவக்கும்’, ரஜினிகாந்த் நடித்திருந்த ‘ராணுவ வீரன்’, கமல்ஹாசன் நடித்த ‘டிக் டிக் டிக்’ உள்ளிட்ட ஹிட் ஸ்டார்களின் படங்கள் திரைக்கு வந்தது. இதே சமயத்தில், பாலச்சந்தர் இயக்கிய ‘தண்ணீர் தண்ணீர்’, பாக்யராஜின் ‘அந்த ஏழு நாட்கள்’ திரைப்படமும் போட்டி போட்டது.
இதையும் வாசிங்க:ஷூட்டிங்கில் விஜயை பார்த்து அப்படியே ஷாக் ஆயிட்டேன்!.. பிரபல நடிகர் சொன்ன சீக்ரெட்!..
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, சிரஞ்சீவி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ராணுவ வீரன். பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல்ஹாசன், மாதவி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டிக் டிக் டிக்’. வி.ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் சிவாஜி, சரிதா நடித்த படம் கீழ் வானம் சிவக்கும்.
இப்படி ஒரு மிகப்பெரிய ஸ்டார்கள் மத்தியில் சின்ன பட்ஜெட் படங்களை இறக்கவே சிலர் பதறுவார்கள். ஆனால் பாக்கியராஜும், பாலசந்தரும் தங்கள் படத்தினை தைரியமாக ரிலீஸ் செய்தனர். இதில் பாரதிராஜா கமலை வைத்து இயக்கிய ‘சிகப்பு ரோஜாக்கள்’ கொடுத்த வெற்றியால் இந்த திரில்லர் படத்தினை இயக்க விரும்பினார்.
படம் மிகப்பெரிய அளவில் ரீச்சை கொடுக்கவே இல்லை. அதே சமயத்தில் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘தண்ணீர் தண்ணீர்’ படம் விமர்சனங்களால் பாராட்டுக்களைப் பெற்றது. ஆனால் வசூல் அளவில் பெரிய வெற்றி பெறவில்லை. அதே நேரத்தில் பாக்யராஜ் இயக்கி, நடித்த ‘அந்த ஏழு நாட்கள்’ திரைப்படம் ஆச்சரியமாக மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
இதையும் வாசிங்க: அடுத்தவன பத்தி தெரியலனா உங்க வேலையா பாருங்க!… சிவகார்த்திகேயனுக்காக வரிஞ்சிகட்டும் சீரியல் நடிகர்…
முக்கியமாக அவர் குரு பாரதிராஜாவின் படத்தையே பின்னுக்கு தள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று பாக்கியராஜுக்கு பெரிய பட வாய்ப்புகள் இல்லை. அப்பா கேரக்டர் கூட கிடைக்காமல் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…