தீபாவளிக்கு ஸ்கெட்ச் போடும் விடாமுயற்சி… ஆனா கூட இத்தனை படம் போட்டிக்கு இருக்கே?

Vidamuyarchi: முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எப்போதுமே ரிலீஸ் இருக்கு விடுமுறை தினத்தையே டார்கெட் செய்யும். அந்த வகையில் வரும் தீபாவளி தினத்திற்கு வெளியாக இருக்கும் படங்கள் குறித்த முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
கோலிவுட்டை பொறுத்தவரை இந்த வருட தொடக்கத்தில் இருந்து சரியான திரைப்படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அதிகபட்சமாக சிவகார்த்திகேயனின் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர் உள்ளிட்ட திரைப்படங்கள் மட்டுமே தைப்பொங்கல் தினத்தில் வெளியானது.
இதையும் படிங்க: ராமராஜனா கொக்கா!.. பக்காவான கதையில் பார்க்க வச்சுட்டாரே!.. சாமானியன் விமர்சனம் இதோ!..
அப்படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. கிட்டத்தட்ட 2014 ஆம் ஆண்டின் பாதி மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் கோலிவுட்டில் ஒரு பெரிய சூப்பர் ஹிட் திரைப்படம் இன்னும் அமையவில்லை. அதே நேரத்தில் இவ்வருடத்தின் அடுத்த பாதியில் முன்னணி நாயகர்களின் படங்கள் வரிசையாக வெளியாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனை தொடர்ந்து தீபாவளி தினத்தில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகும் என்ற தகவல்கள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது. அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் இன்னும் இறுதி கட்ட படப்பிடிப்பு மட்டுமே மீதம் இருக்கிறது. ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இதை முடித்து படத்தை தீபாவளி தினத்தில் வெளியிடப்பட குழு திட்டமிட்டு இருக்கிறது. லைக்கா நிறுவனமும் அவர்கள் தயாரிப்பில் தீபாவளிக்கு ஒரு படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்ற முடிவில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: கன்பார்ம் ஆச்சுங்கோ… தனுஷின் கைவசம் வந்த மல்லுவுட் வெற்றி இயக்குனர்.. அப்டேட் என்ன தெரியுமா?
அதே நேரத்தில் பிரம்மாண்ட படமாக உருவாகி இருக்கும் சூர்யாவின் கங்குவா திரைப்படமும் தீபாவளி தினத்தை குறி வைத்திருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் இப்படம் உருவாகி இருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து சூர்யாவின் திரைப்படம் ரிலீஸ் ஆகும் நிலை இருப்பதால் இப்படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்கே 23 திரைப்படம் தீபாவளி தினத்தை குறி வைத்து இருக்கிறது. அதேபோல விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கராதன் நடிப்பில் உருவாகி வரும் எல்ஐசி திரைப்படமும் இந்த ரேசில் இணைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதுவும் இல்லாமல் கவின் நடிப்பில் இன்னும் பெயர் வைக்கப்படாத கவின்5 திரைப்படமும் தீபாவளியை குறி வைத்தே தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இத்தனை படங்கள் ரேஸில் இருப்பதாக கூறப்பட்டாலும் கடைசி நேர மாறுதலில் சில படங்கள் பின்வாங்கலாம். அந்த வகையில் இரண்டு பெரிய படங்களும், இரண்டு சின்ன பட்ஜெட் திரைப்படங்களும் மட்டுமே தீபாவாளியில் வெளியாகும் என்பது கோலிவுட் வட்டாரத்தின் பேச்சாக இருக்கிறது.