ராமராஜனா கொக்கா!.. பக்காவான கதையில் பார்க்க வச்சுட்டாரே!.. சாமானியன் விமர்சனம் இதோ!..

இயக்குனர் ராகேஷ் இயக்கத்தில் ராமராஜன் நடித்துள்ள சாமானியன் படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. 2001ம் ஆண்டு சீறி வரும் காளை படத்தில் நடித்த ராமராஜன் அதன் பின்னர் 2012ம் ஆண்டு மேதை படத்தில் நடித்தார். இதற்கு மேல் நடிக்க வேண்டாம் என நினைத்து ஒதுங்கியிருந்த அவர் மீண்டும் 12 ஆண்டுகள் கழித்து தற்போது சாமானியன் படத்தில் நடித்துள்ளார்.

ராமராஜனை பல வருடங்கள் கழித்து திரையில் பார்த்த ரசிகர்களுக்கு உற்சாகம் தாங்கவில்லை. அவரும் படத்தில் மிரட்டலான காட்சிகளிலும், கருத்து சொல்லும் இடங்கள் மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு படத்தை கொடுக்க வேண்டும் என நினைத்த நோக்கத்திற்காக நிச்சயம் ரசிக்கப்படுகிறார்.

இதையும் படிங்க: கன்பார்ம் ஆச்சுங்கோ… தனுஷின் கைவசம் வந்த மல்லுவுட் வெற்றி இயக்குனர்.. அப்டேட் என்ன தெரியுமா?

படத்தின் கதை என்று பார்த்தால் தனது நண்பர்களான எம்.எஸ். பாஸ்கர் மற்றும் ராதா ரவியுடன் இணைந்து கொண்டு பரபரப்பாக இயங்கி வரும் ஒரு வங்கிக்குள் சென்று மேனேஜரிடம் டைம் பாம் மற்றும் துப்பாக்கியை காட்டி அந்த வங்கியை ஹைஜாக் செய்கிறார்.

வில்லனாக படத்தில் மைம் கோபி நடித்துள்ளார். வங்கி அதிகாரியாக போஸ் வெங்கட்டும் காவல்துறை அதிகாரியாக கே.எஸ். ரவிக்குமாரும் நடித்துள்ளனர். அஜித் நடித்த துணிவு படத்தை போலவே திரைக்கதை நகரும் நிலையில், படத்தின் முதல் பாதியை விட 2ம் பாதியில் துணிவு கோட்டை விட்டது போல ராமராஜனின் சாமானியன் படம் கோட்டை விடவில்லை.

இதையும் படிங்க: டிராமா போட்டு அழுக விடும் ஈஸ்வரி… கதிகலங்கி நிற்கும் ராதிகா… நிம்மதியா இருக்கும் பாக்கியா..

என்ன காரணத்திற்காக வங்கி கொள்ளையில் ராமராஜன் ஈடுபடுகிறார் என்பதற்கு வலுவான ஃபிளாஷ்பேக் ஒன்று சொல்லப்படுகிறது. அதில், சில லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும், சாமானியர்களை நிச்சயம் 2ம் பாதி கவரும் விதமாகவே இயக்குனர் ராகேஷ் உருவாக்கி உள்ளார்.

இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஆனால், பாடல்கள் பழைய ராமராஜன் படங்களில் வந்து ஹிட் அடித்த பாடல்கள் போல பெரிதாக க்ளிக் ஆகவில்லை. ரிட்டயர்டான ராணுவ வீரர் சங்கர நாராயணன் கதாபாத்திரத்தில் ராமராஜன் நடித்துள்ளார். எமோஷனல் காட்சிகள் மற்றும் மக்களை சுரண்டும் வங்கிகளுக்கு எதிராக பொங்கும் இடங்களில் ஸ்கோர் செய்கிறார்.

இதையும் படிங்க: இப்படி எல்லாத்தையும் காட்டினா எதை பார்க்குறதுனே தெரியலையே!.. மூச்சு முட்ட வைக்கும் விஜய் பட நடிகை!..

முதல் பாதியை இன்னமும் ரசிக்கும் படியாக எடுத்திருந்தால் நிச்சயம் இந்த சாமானியன் சாதனை நாயகனாக மாறியிருப்பார். ராமராஜன் ரசிகர்களுக்கான படமாக தற்போது வெளியாகி இருக்கிறது இந்த சாமானியன்.

சாமானியன் - சறுக்கவில்லை!

ரேட்டிங் - 2.5/5.

 

Related Articles

Next Story