நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேசிய அளவில் பாஜக பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது. தென்னிந்தியாவிலும் ஆந்திரா மற்றும் கேரளாவில் அதன் ஆளுமையை செலுத்தியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில், ஒரு இடத்தில் கூட தாமரை மலரவில்லை..
திமுகவுக்கு சம பலத்துடன் போட்டியாக இருந்த எதிர்க்கட்சியான அதிமுக இன்று பாஜக அளவுக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் டோட்டல் வாஷ் அவுட் ஆகியுள்ளது. அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வளர்த்த கட்சியின் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது.
இதையும் படிங்க: மைக் மோகனுக்கு அப்படி ஒரு வியாதியா? என்ன சொல்கிறார் இந்த பிரபலம்?
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று மிகப்பெரிய தேசிய கட்சியாக மாறியுள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி, ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி, பிரேமலதாவின் தேமுதிக என எதுவுமே வெற்றி பெறவில்லை.
திமுக மிகப்பெரிய பலத்தை மக்களவைத் தேர்தலிலேயே காட்டி உள்ள நிலையில் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவின் கை மேலும் ஓங்கி இருக்கும் எனத் தெரிகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தை உருவாக்கியுள்ள நடிகர் விஜய் 2026 ஆம் ஆண்டு கப்பு முக்கியம் பிகிலு என பேசி கனவு கண்டதெல்லாம் காணாமல் போய்விடும் சூழல் உருவாகியுள்ளதாக கூறுகின்றனர்.
இதையும் படிங்க: பெட்ரூமில் கிளுகிளுப்பு காட்டும் ஜெயிலர் பட நடிகை… ஒவ்வொன்னும் சும்மா அள்ளுது!…
பல ஆண்டுகளாக திமுகவை எதிர்த்து கட்சி நடத்தி வரும் பல்வேறு கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் உள்ளநிலையில் புதிதாக வரும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பத்திலேயே மிகப்பெரிய அடிவாங்குமா? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.
நடிகர் விஜய் அரசியலில் தோல்வியை சந்தித்தால் ரசிகர்களுக்கு அப்பவும் ஹேப்பி தான் என்றும் தளபதி 69 படத்துடன் நிறுத்தாமல் தளபதி 70 தொடங்கி தளபதி 100 வரை நடிப்பார் என கலாய்த்து வருகின்றனர். நடிகர் விஜய் கோட் படத்தை முடித்து விட்டு தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கி பல்வேறு பணிகளை செய்தால் தான் மக்களின் அன்பை பெற முடியும் என்றும் அதை எந்தளவுக்கு அவர் செய்வார் என்பது பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும் என்கின்றனர்.
இதையும் படிங்க: ராகவா லாரன்ஸ் படத்தில் கேமியோ ரோலில் சூர்யா… மீண்டும் ஒரு ரோலக்ஸா..?
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…