Cinema News
ராஜ்கிரணிடம் வடிவேலு எப்படி சான்ஸ் கேட்டார் தெரியுமா?.. இப்படியெல்லாம பண்ணுவாரு?
தமிழ் சினிமாவில் வைகை புயலாக நகைச்சுவையில் தனக்கென ஒரு அடையாளத்தை தக்க வைத்தவர் நடிகர் வடிவேலு. கிட்டத்தட்ட 90களில் இருந்து 20 வருடங்களுக்கும் மேலாக தன் நகைச்சுவை மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர். 1991 ஆம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்த என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் வடிவேல்.
அந்த நேரத்தில் நகைச்சுவையில் ஜாம்பவான்களாக இருந்த கவுண்டமணி செந்தில் ஆகிய இருவருக்கும் இடையில் ஒரு துரும்பு போல வந்து நின்னார் வடிவேலு. அந்தப் படத்தின் படப்பிடிப்பிலேயே கவுண்டமணிக்கும் வடிவேலுவுக்கும் ஏதோ சிறு பிரச்சனை இருந்ததாகவும் சில துணை நடிகர்கள் பல பேட்டிகளில் கூறியிருக்கின்றனர்.
ஆனால் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் எந்த ஒரு கஷ்டத்தையும் தாங்கிக் கொண்டு தன் வழியே நடந்து சென்றார் வடிவேல்.அதனாலேயே ஒரு பெரிய நகைச்சுவை மன்னனாக வர முடிந்தது. இந்த நிலையில் வடிவேலுவை முதன் முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்தியது ராஜ்கிரண் தான் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் ராஜ்கிரணிடம் எப்படி வாய்ப்பை பெற்றார் என்ற ஒரு சுவாரசிய சம்பவத்தை பிரபல மூத்த பத்திரிகையாளரான செய்யாறு பாலு கூறி இருக்கிறார்.
ராஜ்கிரண் ஒரு திருமண வரவேற்பிற்காக மதுரைக்கு சென்றிருந்தாராம். அப்போது அந்த திருமண விழாவில் அது சம்பந்தமான சில உறவினர்கள் மாலையில் வரவேற்பு என்ற காரணத்தினால் காலையிலேயே வந்த ராஜ்கிரனை ஏதாவது ஒரு ஹோட்டலில் தங்க வைக்கலாமா என யோசித்தார்களாம். ஆனால் ராஜ்கிரண் வேண்டாம் ,இருக்கட்டும், பார்த்துக்கொள்கிறேன் என சொல்லி இருக்கிறார் .ஆகவே அதுவரை ராஜ்கிரணுக்கு பேச்சுத் துணைக்கு ஒரு நபரை அறிமுகம் செய்து வைத்தார்களாம்.
ஒல்லியான உடம்புடன் கரு கரு நிறத்துடன் அந்த நபர் காணப்பட ராஜ்கிரண் “இது என்னடா வம்பா போச்சு” என முதலில் யோசித்து இருக்கிறார். அதன் பிறகு அந்த நபரே பேச ஆரம்பித்தாராம். அதாவது தனக்கு பாட்டு பாட தெரியும். சினிமாவில் நடிக்கவும் ஆர்வம் இருக்கிறது எனக் கூறி தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் நான் சாவுக்கு எல்லாம் ஆடி இருக்கிறேன் என்றும் கூறி அது சம்பந்தமான பாடல்களையும் பாடி காட்டினாராம்.
இது ராஜ்கிரணுக்கு மிகவும் பிடித்துப் போக சரி,வா உன்னை நான் அழைத்துக் கொண்டு போகிறேன் என்று கூறி என் ராசாவின் மனசிலே படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வர சொல்லி விட்டாராம். அதன் பிறகே அந்த படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர்தான் நகைச்சுவை மன்னன் வைகை புயல் வடிவேலு.