பத்மினியின் கடைசி ஆசை என்ன தெரியுமா? ஃபீலிங்கோட பிரபலம் சொல்வதைக் கேளுங்க...

by sankaran v |   ( Updated:2024-03-28 14:13:14  )
Padmini, Shobana
X

Padmini, Shobana

பத்மினியைப் பற்றி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

நாட்டியப்பேரொளி என்றாலே அது பத்மினி தான். நாட்டியப் பேரொளி என்ன உலகப் பேரொளியே அவர் தான். எங்களுக்கு எல்லாம் அவர் தேவதை மாதிரி தான். எந்த வயசானாலும் எல்லோரிடமும் கலகலன்னு பேசுவாங்க என்றார் ஒய்.ஜி.மகேந்திரன்.

அப்புறம் அவர் ஒரு துக்கமான விஷயத்தையும் பகிர்ந்து கொண்டார். 2002 அல்லது 2003 என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. பத்மினி இங்க வந்துருந்தாங்க. நான் அவங்கக்கிட்ட சொன்னேன். வருஷா வருஷம் சிவாஜி நினைவாஞ்சலி நிகழ்ச்சியை நடத்துறேன்.

இதையும் படிங்க... 3 படம் ஹிட் கொடுத்தேன்.. ஆனாலும் சரண் அப்படி செய்தார்!.. ஃபீல் பண்ணி பேசும் பரத்வாஜ்!..

வருஷா வருஷம் ஒருவருக்கு சிவாஜி விருது கொடுப்பேன். இந்தத் தடவை உங்களைத் தவிர வேறு யாருக்கும் கொடுக்கணும்னு எனக்குத் தோணல என ஒய்.ஜி.மகேந்திரன் சொன்னாராம்.

அதற்கு பத்மினி, டேய்... என்னைத் தவிர வேறு யாருக்குடா கொடுப்பே? நான் தான்டா வாங்குவேன். எங்கே காமராஜர் அரங்கமா? எத்தனை மணிக்கு வரணும்னு சொல்லுன்னு கம்பீரமா சொன்னாங்க. அதுக்கு நீங்க எப்போ வேணாலும் வாங்கம்மா. ஆனா வந்து ஒரு 10 நிமிஷமாவது சிவாஜியைப் பத்திப் பேசணும்னு சொன்னேன். 10 நிமிஷமா... மிச்சத்தை யார் பேசறது? அவங்க அப்படித் தான் சொல்வாங்கன்னு சொன்னாங்க.

YGM

YGM

ஆனா துரதிர்ஷ்டவசமா புரோக்ராமுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி அவங்க ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆயிட்டாங்க. அதுக்கு அப்புறம் அவங்க ஷோவுக்கு வர முடியல. அமரர் ஆயிட்டாங்கன்னு நெகிழ்ந்து பேசுகிறார் ஒய்.ஜி.மகேந்திரன். இடையில் ஷோபனாவை சந்தித்தாராம். அப்போது பத்மினியைப் பார்க்க ஷோபனா சென்றாராம். அப்போது பத்மினி ஷோபனாகிட்ட சொன்னாங்களாம்.

அவங்ககிட்ட என்னை ஐசியுக்கு அழைச்சிட்டுப் போயிடு. இன்னும் ரெண்டு நாள்ல மகேந்திரன் அவார்டு பங்ஷன் இருக்கு. அங்க அதுல சிவாஜி பேர்ல விருது தரானாம். அதை நான் வாங்கியே ஆகணும். அவனும் பெரிய சிவாஜி ஃபேன். நானும் சிவாஜி ஃபேன். அதுல சிவாஜியைப் பத்திப் பேசணும்னு சொன்னாங்களாம்.

Next Story