'பிராப்தம்' இல்லாததால் கதிகலங்கி நின்ற சாவித்திரி... ஸ்ரீதரிடம் சிம்பாலிக்காக என்ன சொன்னார் தெரியுமா?
சாவித்திரி தயாரித்து இயக்கிய சிவாஜி படம் பிராப்தம். இந்தப் படத்தில் நடித்ததால் சிவாஜி மார்க்கெட் குறைந்தது என்றும் சாவித்திரி, ஜெமினிக்குள் கருத்து வேறுபாடு வந்தது என்றும் பல வதந்திகள் அப்போது சொல்லப்பட்டன. இந்தப் படம் சாவித்திரிக்குத் தோல்வி என்றும் சொல்லப்பட்டது. பெரும் முயற்சிக்குப் பிறகு பிராப்தம் படம் 1971 தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று வெளியானது. அன்றைய நாளில் தான் சுமதி என் சுந்தரி என்ற சிவாஜியின் படமும் வெளியானது. பிராப்தம் படம் வெளியாவதற்கு முன்னரே பாடல்கள் பிரபலமாகிவிட்டன.
இதையும் படிங்க... நடிப்பை பார்த்து வியந்து வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்த நடிகர் திலகம்!. அட அவரா?!..
ஆனாலும் படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. இந்தப் படத்திற்காக சாவித்திரி 3 வீடுகளை அடமானமே வைத்து இருந்தாராம். இந்தப் படத்தை எடுக்க வேண்டாம் என ஜெமினி சாவித்திரியுடன் சண்டை போடுவாராம். இதனால் தான் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவு வந்ததாம்.
அதனால் இந்தப் படத்தின் விஷயத்தில் அதன்பிறகு ஜெமினியும் தலையிடவே இல்லையாம். படத்தின் ரிலீசுக்கும் சிக்கல் வந்ததாம். அப்போது சிலர் பிராப்தம் எப்போ ரிலீஸ் என்று டைரக்டர் ஸ்ரீதர் கேட்டாராம். அதற்கு எப்போ பிராப்தம் இருக்கோ அப்போ என்று வேதனை கலந்த வேடிக்கையாக சொன்னாராம் சாவித்திரி.
சிவாஜிக்குக் கூட இந்தப் படத்தில் நடிக்க அவ்வளவாக விருப்பமில்லையாம். தங்கை மாதிரி சாவித்திரி பழகி விட்டாரே என்று கொஞ்சம் யோசித்து படத்தை எடும்மா என்றாராம். ஆனாலும் சாவித்திரி யாருடைய பேச்சையும் கேட்கவே இல்லையாம். விடாப்பிடியாக படத்தை எடுத்தார். படுதோல்வி அடைந்ததும் அவர் மதுப்பழக்கம் இன்னும் தீவிரமாகி உடல்நிலையைக் கெடுத்துக் கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது.
பிராப்தம் படம் இவ்வளவு தோல்வியைச் சந்தித்த போதும் படத்தின் பாடல்கள் அனைத்துமே செம மாஸ். சொந்தம் எப்போதும், இது ரகளை மாதம், சந்தனத்தில் ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் இந்தப் படத்தில் தான் உள்ளன. சிவாஜி, சாவித்திரியுடன் எஸ்.வி.ரங்கராவ், நம்பியார், ஸ்ரீகாந்த், நாகேஷ், சி.கே.சரஸ்வதி உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு எம்எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். தெலுங்குக் கதை என்பதால் தமிழில் இந்தப் படம் எடுபடாமல் போனது.