Cinema History
அந்த நடிகருடன் படு கிளாமராக நடித்த ஜெயலலிதா!.. தியேட்டரில் அலைமோதிய கூட்டம்!..
1970களில் எம்ஜிஆர், சிவாஜிக்கு அடுத்தபடியாக முத்துராமன், ரவிச்சந்திரன், ஜெமினிகணேசன் தங்களுக்கு என ஒவ்வொரு பாதையை வகுத்துக்கொண்டு வெற்றி நடைபோட்டனர்.
வெள்ளிக்கிழமை தோறும் ஸ்பை திரில்லர் படங்களைக் கொடுத்த ஜெய்சங்கரின் படங்களில் ஒன்று தான் வைரம். பெயருக்கு ஏற்றாற்போல வைரத்தைக் கைப்பற்றும் கதை தான் வைரம். 1972ல் வெளியான விக்டோரியா நம்பர் 203 என்ற இந்திப் படத்தின் ரீமேக்காக வெளியாகி சூப்பர்ஹிட் ஆனது. இந்தியில் சாய்ராபானு கவர்ச்சியில் தாராளம் காட்டினார். இதே போல தமிழில் ஜெயலலிதா கேபரே டான்ஸ் ஆடி படுகவர்ச்சியாக நடித்தார். இதற்காகவே வைரம் படத்திற்கு கூட்டம் அலைமோதியது.
கர்நாடகாவின் கோலாரில் இந்தப் படம் செம மாஸ் ஹிட் அடித்தது. இந்தப்படத்தின் உரிமை கண்ணதாசனிடம் இருப்பதை அறிந்து தயாரிப்பாளர்கள் பலர் அவரிடம் வாங்க போட்டி போட்டார்களாம். ஜெய்சங்கர் நடித்த படங்களில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். ஆக்ஷன், சஸ்பென்ஸ், காமெடி, திரில்லர் என அனைத்தும் கலந்த காமெடி படம் இது. டி.ஆர்.ராமண்ணா இயக்கியுள்ளார்.
படத்தின் கதை இதுதான். குதிரை வண்டியை ஓட்டுபவராக சகஸ்ரநாமன் வருகிறார். ஒரு கும்பல் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்வதைப் பார்க்கிறார். இதைப் பார்த்ததால் கொலை பழி இவர் மீது விழுகிறது.
கும்பலில் ஒருவன் யாருக்கும் தெரியாமல் குதிரை வண்டியில் ஒரு பையில் வைரத்தை ஒளித்து வைக்கிறான். வண்டி ஓட்டுநரின் மகள் ஜெயலலிதா. அவளோ தந்தை சிறை சென்ற பின் ஆண் வேடம் போட்டு ஊர் சுற்றி பிழைப்பு நடத்துகிறாள். இவர் பணக்கார கும்பல் தலைவரின் மகன் ஜெய்சங்கரை சந்திக்கிறாள்.
இதையும் படிங்க… எங்களால முடியாது ராசா… தக் லைஃபில் இருந்து கழண்ட அடுத்த நடிகர்… போச்சா!
இருவரும் காதலிக்கின்றனர். இதற்கிடையில் வைரங்களைத் தேடி கும்பல் வருகிறது. ஜெயலலிதாவையும் கடத்துகிறது. இவர்களிடமிருந்து வைரங்களையும், ஜெயலலிதாவையும் மீட்கிறார் ஜெய்சங்கர். வைரங்களைக் காவல்துறையிடம் ஒப்படைக்கிறார். இதுதான் கதை. கடைசியில் ஜெயலிலதாவின் தந்தையும் விடுதலையாகிறார்.