மம்முட்டி சம்பளமே வாங்காமல் நடிச்ச படம் எதுன்னு தெரியுமா? ஏன்னு தெரிஞ்சா அசந்துருவீங்க..!
கேரள சூப்பர்ஸ்டார் மம்முட்டி பல சூப்பர்ஹிட் தமிழ்ப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் நடித்த மௌனம் சம்மதம், அழகன் படங்கள் இன்று வரை பேசப்படும். நம்மூரு சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடித்த தளபதியில் கெத்தான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
தமிழ் நடிகர்களில் ஒரு சிலர் சம்பளமே வாங்காமல் சில படங்களில் நடித்துள்ளனர். அதே போல மம்முட்டியும் ஒரு தமிழ்ப்படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்துள்ளார். அது என்னன்னு பார்ப்போம்.
நடிகர் பாவா லட்சுமணன் பிரபல தயாரிப்பளார் சித்ரா லட்சுமணனுடனான பேட்டி ஒன்றில் இதுபற்றிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
லிங்குசாமி இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான படம் ஆனந்தம். இந்தப் படத்தில் முதலில் நடிக்க சரத்குமாரைத் தான் பேசினாங்களாம். அதன்பிறகு சந்தர்ப்ப சூழல் மாறிடுச்சாம்.
மம்முட்டிக்கிட்ட போய் கதை சொல்ல போனோம். அவர் உட்கார்ந்துருக்கற ஸ்டைல பார்த்தா மதிக்கவே மாட்டாரு. ஒரு மாதிரி கால தூக்கி மேல போட்டுக்கிட்டு தெனாவெட்டுல இருப்பாரு. நாங்க கீழே உட்கார்ந்துருப்போம்.
லிங்குசாமி சார் கதையை சொல்லுவாரு. அப்புறம் இடையில டீ சாப்பிடலாமான்னு கேட்டார். டீ குடிச்சதும் கதை சொல்லி முடிச்சாரு லிங்குசாமி. அவரைக் கட்டிப் புடிச்சி முத்தம் கொடுத்தாரு மம்முட்டி. சௌத்ரிக்குப் போன் போடுன்னாரு.
சார் ஈ படத்துல நடிக்கும்னு ஆரம்பிச்சாரு. ஆனா அந்தப் படத்துல நடிச்சதுக்கு மம்முட்டி ஒரு காசு கூட வாங்கல. ஏன்னா ரொம்ப நாளுக்குப் பிறகு அவருக்கு நல்ல கதை கிடைச்சிருக்கு. சௌத்ரி சார் சம்பளம் பேச வரும்போது வேணாம்.
இதையும் படிங்க... புடிச்ச விஷயத்த பண்றதே ஒரு கிக்! ரேஸூக்காக அஜித் எப்படிலாம் ரெடியாகுறாரு பாருங்க..வெளியான வீடியோ
சார் எனக்கு இந்தக் கதை ரொம்ப மனசுல பட்டுருச்சுன்னு சொல்லி சம்பளம் வாங்க மறுத்துட்டார். கடைசியா சௌத்ரி சார் அவருக்குக் கேரள ரைட்ஸக் கொடுத்தாரு. அற்புதமான கலைஞன் அவர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.