உனக்குலாம் மியூசிக் போட முடியாது!.. ராஜ்கிரணை விரட்டிய இளையராஜா!.. அப்புறம் நடந்தது இதுதான்!..
ராஜ்கிரண் நல்ல செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் கீழக்கரை. சினிமா மேல உள்ள மோகத்தில் முதன் முதலில் ஒரு சினிமா கம்பெனியில் ஆபீஸ் பாயாக இருந்து கலெக்ஷன் பாயாக புரொமோஷன் ஆனார். அப்புறம் அந்தத் தொகையைக் கொண்டு போய் புரொடக்ஷன் கம்பெனில கொடுப்பார்.
அதன்பிறகு இவரே காசு சேர்த்து ஆங்கிலப்படங்களை ரிலீஸ் செய்தார். இதன்பிறகு இவரே ஒரு ஆபீஸ் ஆரம்பிக்க அதற்கு ஆபீஸ் பாயாக வடிவேலுவை சேர்த்தார். அதன்பிறகு புரொடியூசர் ஆசையில் சென்னைக்குப் போனார். அதன்பிறகு கையில் உள்ள எல்லா காசையும் வைத்து படங்களை வாங்கி விற்கலாம்னு பார்க்கிறார். ஆனா வாங்கின ரேட்டுக்குக்கூட போகலையாம். அதனால வந்த விலைக்கே எல்லாவற்றையும் விக்கிறாரு. அப்புறம் சென்னையில ஆபீஸ் போட வடிவேலுவை அங்கும் வரவைத்தாராம் ராஜ்கிரண்.
இதையும் படிங்க... பாடாய்படுத்தும் நெப்போட்டிசம்!.. தமிழ்த்திரை உலகில் அல்லோகலப்பட்ட நடிகர் நடிகைகள்…
புரொடியூசர் வரை வந்த ராஜ்கிரணுக்கு ஹீரோ ஆசை வந்தது. அப்போது கஸ்தூரி ராஜா என்பவரை அறிமுகப்படுத்த திட்டமிட்டார். டைரக்ஷன் நாம பண்ண வேண்டாம். அவரை வைத்தே டைரக்ட் பண்ண வைக்கலாம்னு நினைச்சார். அப்போது அவர் இளையராஜா இருந்தால் தான் இந்தப் படம் பிக்அப் ஆகும்னு அவரு வீட்டு வாசல்லயே கதியாகக் கிடந்தாராம். அப்போது இளையராஜா நீ யாருன்னே தெரியாது. உன் படத்துக்கு எல்லாம் மியூசிக் போட முடியாதுன்னு சொன்னாராம்.
அதன்பிறகு கவிஞர் வாலி, இளையராஜாவிடம் ஒருவாட்டி அந்தப் படத்தைப் போய் பாரேன். அவன் தான் மறுபடியும் மறுபடியும் வாரான்லன்னு சொல்ல படத்தைப் பார்த்த இளையராஜா அசந்து போனார். இந்தப் படத்தை நானே தயாரிக்கிறேன். நானே வந்த விலைக்கு வாங்கிக்கறேன்னும் சொன்னாராம்.
அந்தப் படத்தை பாதி இளையராஜா தயாரிக்க, மீதி பாதியை ராஜ்கிரண் தயாரித்தாராம். கஸ்தூரி ராஜா தான் இயக்கினாரா என்றால் அதுவும் இல்லையாம். பெயர் தான் அவரோடது. இயக்கினது எல்லாம் ராஜ்கிரண் தானாம். அது எந்தப் படம்னு தெரியுமா? என் ராசாவின் மனசிலே.