பாடாய்படுத்தும் நெப்போட்டிசம்!.. தமிழ்த்திரை உலகில் அல்லோகலப்பட்ட நடிகர் நடிகைகள்...

நெப்போட்டிசம் என்பது ரத்த உறவுகள். தமிழ்த்திரை உலகில் வாரிசு நடிகர்கள், நடிகைகள் ஜொலித்தார்களா என்றால் அந்த அளவுக்கு இல்லை. அதற்கு சில நடிகர் நடிகைகளை உதாரணமாகப் பார்ப்போம். லிஸ்ட் பெரிசாக இருப்பதால் ஒருசில நடிகர், நடிகைகளைத் தான் குறிப்பிட்டுள்ளோம். வாங்க பார்க்கலாம்.

நெப்போட்டிசம் என்ற பெரிய செல்வாக்கு வைத்து தமிழ்சினிமாவுக்குள் பல பிரபலங்கள் வந்துள்ளனர். ஆனாலும் அவர்களால் ஜெயிக்க முடியாது. பானுப்பிரியாவின் தங்கை சாந்திப்பிரியா. இவர் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் நடித்து பெரிய அளவுக்கு வருவாங்கன்னு நினைச்சாங்க. ஆனால் 10 வருஷம் தான் தாக்குப்பிடிச்சாங்க. வேறு எந்தப் படமும் பெரிதாக ஓடவில்லை. அப்புறம் கல்யாணம் பண்ணிட்டி செட்டில் ஆகிட்டாங்க.

சிறுத்தை சிவா ஒரு இயக்குனர். அவரது தாத்தா அருணாச்சலான்னு பெரிய ஸ்டூடியோ வச்சிருந்தாராம். அவரு அப்பா ஜெயக்குமாரும் 350 படங்கள்ல நடிச்சிருந்தாராம். ஆனா அவரு தம்பி பாலா தமிழ்ல வாய்ப்பு கிடைக்காம மலையாளத்துல கேரக்டர் லெவல்ல நடிச்சிக்கிட்டு இருக்காரு. தமிழ்ல அன்புன்னு ஒரு படம் மட்டும் நடித்தார்.

Nepotism actress

Nepotism actress

பாரதிராஜாவின் மகன் மனோஜ் புளோரிடாவில் போய் நடிப்பு கத்துக்கிட்டு வந்தாரு. தமிழில் தாஜ்மகால் படத்தில் நடித்தார். பெரிய ரவுண்டு வருவாருன்னு பார்த்தா அந்த அளவுக்கு வரல. இவருக்கு நடிப்பு செட்டாகல. இயக்குனர் ஷங்கர்கிட்ட 2008 முதல் 2010 வரை உதவி இயக்குனரா இருந்தாரு.

தேவயாணி தம்பி நகுல் பெரிய அளவில் வரவில்லை. பாய்ஸ் படத்தில் அறிமுகமானார். காதலில் விழுந்தேன் படத்தில் நடித்தார். பெரிய அளவில் அவரால் வர முடியவில்லை.

பாண்டியராஜன் மகன் பிரித்விராஜன் கைவந்த கலை படத்தில் நடித்தார். ஆனாலும் யாருக்கும் தெரியவில்லை. இப்போ கேரக்டர் ஆர்டிஸ்டா நடிச்சிக்கிட்டு இருக்கார். ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்தாலும் பெரிய அளவில் அவர் கவனிக்கப்படவில்லை.

காஜல் அகர்வால் மாதிரி அவரோட தங்கை நிஷா அகர்வால் அந்த அளவு வரவில்லை. இஷ்டம் என்று விமலுடன் ஜோடி சேர்ந்தார். ஓடவில்லை. தமிழில் 7 படங்களும் பிளாப். தெலுங்கிலும் அப்படித்தான்.

இதையும் படிங்க... மாமனார் – மருமகன் ரெண்டு பேருக்குமே வாயில சனிதான் போல!.. இப்படியா வாய் விட்டு மாட்டிக்குவாங்க!..

ஆர்யாவின் தம்பி சக்தியும் பெரிய அளவில் வரவில்லை. ஆர்யாவும் தம்பிக்காக காதல் டூ கல்யாணம் எடுத்தார். கடைசி வரை ரிலீஸ் ஆகவில்லை. அடுத்து புத்தகம் பிளாப். அமரகாவியம் தான் கொஞ்சம் பேர் வாங்கிக் கொடுத்துச்சு.

சிலம்பரசன் தம்பி குறளரசன் அந்த அளவு வளரவில்லை. சிம்பு நடித்த படங்களிலும் சேர்ந்து நடித்தார். இது நம்ம ஆளு படத்தில் இசை அமைப்பாளர் ஆனார். ஆனா இப்போ இன்டிபென்டன்ட் ஆல்பம் பண்ணிக்கிட்டு இருக்காராம்.

வெங்கட்பிரபு தம்பி பிரேம்ஜிக்கு சரியான இன்ட்ரோவும், கம்பேக்கும் கொடுக்க முடியவில்லை.ராதாவின் மகள் கார்த்திகா நாயர் முதல்ல நடித்த கோ படத்தில் பேர் வாங்கினார். அதன்பிறகு படம் பிளாப். அவரது தங்கை துளசி நாயர் 2 நடித்தது 2 படங்கள் தான். அதுவும் பிளாப். லண்டனில் படிக்க போய் கார்த்திகா நாயர் கல்யாணத்துக்குத் தான் திரும்பி வந்தாராம்.

Related Articles
Next Story
Share it