விஜய் இடத்தை நிரப்ப வருபவர் யாருன்னு தெரியுமா? பிரபலம் சொல்வதைக் கேளுங்க...
அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதிக்குப் பிறகு வெற்றிடம்னு சொன்னாங்க. ஆனா தமிழ்சினிமாவில் விஜய் அரசியலுக்குப் போன பிறகு வெற்றிடம் என்று சொல்லத் தேவையில்லை. யாரும் யார் மாதிரியும் வர முடியாது. ஏன்னா ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட குணாதிசயங்கள் இருக்கும்.
தமிழ்சினிமா உலகில் எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருந்தே ஒரு கேள்வி எழுந்து வருகிறது. இவரோட இடத்தை யார் நிரப்பப் போறாங்க என்பது தான் அந்தக் கேள்வி. ரஜினி அரசியலுக்கு வந்துட்டாருன்னா அடுத்து சூப்பர்ஸ்டார் விஜய் தான்னு சொன்னாங்க.
விஜய் அரசியலுக்கு வந்துட்டாருன்னா அடுத்து வசூல் ரீதியா எந்த ஹீரோ டாப்ல வருவாங்க.? என்ற கேள்விக்கு பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் இவ்வாறு பதில் சொல்கிறார்.
விஜய் இடத்தை நிரப்ப இன்னொரு நடிகர் வர முடியாது. விஜய் இடத்தை அவர் தான் நிரப்ப முடியும். அஜீத் இடத்தை அவர் தான் நிரப்ப முடியும். சிவகார்த்திகேயன் இடத்தை அவர் தான் நிரப்ப முடியும். விஜய் இல்லேன்னா அந்த இடத்தை நிரப்ப இன்னொருத்தர் வருவாருன்னு நான் சொன்னேன்.
அதுக்கு என்ன காரணம்னா கலெக்ஷன் இல்லேன்னா வேறொரு படம் வந்து அந்த இடத்தை நிரப்பிடும்னு சொன்னேன். ஆனா அவரவர் சாதனை அவரவர்க்கு மட்டும் தான். அதை வந்து இன்னொருத்தர் நிரப்பவே முடியாது.
இப்போ ரஜினியை எடுத்துக்கிட்டா அவரோட ஸ்டைல், பாடி லாங்குவேஜ் அதை எல்லாம் இன்னொருத்தர் கொடுத்துட முடியுமா? அவரு இல்லேன்னா வேறொருத்தர் அந்த மாதிரி நடிச்சா இமிடேஷனாகத் தான் இருக்கும்.
இதையும் படிங்க... நான் எப்படி அவர் கூட நடிக்கிறது?!.. பயந்த நடிகை!.. அஜித் செய்த நெகிழ்ச்சியான சம்பவம்!..
தமிழ்சினிமாவோட பிசினஸை அதிகப்படுத்துவதற்கோ, குறைப்பதற்கோ வேற ஒருத்தவர் வருவாரு. அது வந்து யாருன்னு கேட்கறீங்க.? அது சிவகார்த்திகேயனா இருக்கலாம். அவரு படங்கள் தான் மினிமம் கேரண்டியா இருக்கு. ஒரேயடியா பிளாப் ஆகாம ஓரளவு ஸ்டெடியா நிக்குது. அதனால நான் அவரை சொன்னேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.