Connect with us
MSV., CT

Cinema History

எம்.எஸ்.வி கன்னத்தில் ‘பளார்’ விட்ட தாய்… கதி கலங்கிய சின்னப்ப தேவர்… ஏன்னு தெரியுமா?

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அவரது தத்துவப் பாடல்கள் தான். அவற்றில் ஒன்று தான் இது. நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே பாடலை நாம் அனைவரும் கேட்டு ரசித்திருப்போம்.

இந்தப் பாடலின் கடைசி வரிகளில் “கிளி போல பேசு, இளங்குயில் போல பாடு, மலர் போல சிரித்து நீ குறள் போல வாழு” என்ற வரும். குறள் போல வாழ்வது என்பது அவ்வளவு எளிதானதல்ல. அது நீதி நேர்மை வழியில் நின்று நடப்பவர்களுக்குத் தான் முடியும். அவர்களை நாம் விரல் விட்டு எண்ணி விடலாம். பெரும்பாலானோர் வார்த்தை அலங்காரத்திற்காக மட்டுமே மேடைகளில் இது போன்ற நற்கருத்துகளை முழக்கமிடுவர்.

இதையும் படிங்க… இனிமே ரசிகர்களை ஏமாத்த முடியாது.. அரசியலுக்கு போறேன்!.. எம்.ஜி.ஆர் சொன்னது இதுதான்!…

அந்த வகையில் உண்மையிலேயே அப்படி வாழ்ந்தவரும் உண்டு. அது வேறு யாருமல்ல. எம்.எஸ்.விஸ்வநாதனின் தாய். அந்த சம்பவத்தை நினைவுகூர்கிறார் பிரபல வசனகர்த்தா ஆரூர்தாஸ்.

வழக்கமாக தேவரின் படங்களுக்கு கே.வி.மகாதேவன் தான் இசை அமைப்பது வழக்கம். விநியோகஸ்தர்களின் வேண்டுதலின்படி தனது அடுத்த படத்துக்கு ஒரு சின்ன மாற்றம் செய்ய விரும்பினாராம் சாண்டோ சின்னப்பா தேவர். அதற்காக வேட்டைக்காரன் படத்திற்கு எம்எஸ்வி.யை இசை அமைக்கச் செய்யலாம் என்று முடிவு செய்தாராம்.

அதன்படி அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். மொத்த பணத்தையும் அவரிடம் நீட்டி தனது அடுத்த படத்துக்கு இசை அமைக்குமாறு கேட்டாராம். அதற்கு எம்எஸ்வி.க்கு என்ன முடிவு எடுப்பது என்றே தெரியவில்லையாம். ஒரு கணம் யோசித்தாராம். ஒப்புக்கொள்வதா, வேண்டாமா என்று. அப்போது அவரது தாய் விசு கொஞ்சம் உள்ளே வா என்று அழைத்தாராம். உள்ளே போனது தான் தாமதம் பளார் என எம்எஸ்வியின் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது.

Vettaikaran

Vettaikaran

தன்னை தாயார் ஏன் அடித்தார் என்று அவர் யோசிப்பதற்குள் இப்படி சொன்னாராம். “நன்றி கெட்டவனே, ஒரு காலத்துல நீ வேலை இல்லாம கஷ்டப்பட்ட. அப்போ அய்யர்கிட்ட (அதாங்க கே.வி.மகாதேவன்) உதவி கேட்டப்போ, உனக்கு போட்டுக்க சட்டை கொடுத்து, ரயில் செலவுக்குப் பணம் கொடுத்து உன்னை கோயம்புத்தூருக்கு அனுப்பினார். அந்தப் புண்ணியவான் தொழிலுக்கு நீ போட்டியா போகலாமா..?” என கோபம் கொப்பளிக்கக் கேட்டாராம்.

அந்தத் தாயார் இந்த வயதிலும் தன் மகனைக் கன்னத்தில் அறைந்ததைப் பார்த்ததும் கதிகலங்கிப் போனாராம் தேவர். தன் ஆபீசுக்குப் போய், நடந்ததைக் கூறி, இப்படியும் ஒரு தாயும் பிள்ளையுமா என கூறி அனைவரிடமும் ஆச்சரியப்பட்டாராம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top