Connect with us
Dhanush, Ishwarya

Cinema News

கடைசியில இதுதான் மேட்டரா?!.. தனுஷ் – ஐஸ்வர்யா மொத்தமா ஏமாத்திட்டாங்களேப்பா!..

தனுஷ் ஐஸ்வர்யாவை விட வயதில் இளையவர். இருவருக்கும் திருமணமும் நடந்து 2 குழந்தைகளும் வளர்ந்து விட்டனர். இப்போது விவாகரத்து என்றதும் திரையுலகிற்கே ஆச்சரியமாக இருக்கிறது. இந்த முடிவுக்குப் பின்னால் என்ன நடந்தது என்று ஆச்சரியமாக இருக்கிறது. இதுபற்றி வலைப்பேச்சு அந்தனன் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

இதையும் படிங்க… கேப்டனாக மாறிய வினுசக்கரவர்த்தி! கலாட்டா செய்த ரசிகர்களை என்ன செய்தார் தெரியுமா?

தனுஷ் சம்பாதித்த சொத்துகளை இருவரது பெயரிலும் தான் வாங்கினாராம். இருவருக்கும் வாட்சப், சாட்டிங் எல்லாம் நடந்து வருகிறதாம். சுச்சிவேஷன் ஷிப்னு ஒண்ணு இருக்கிறது. அதாவது எவ்வளவு வேணாலும் ஒண்ணா லைப்ல டிராவல் பண்ணிக்கலாம். பிடிக்கலைன்னா அவங்கவங்க பிரிஞ்சிப் போயிடலாம். இதுல யாரும் யாரையும் டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க. அப்படிப்பட்ட ரிலேஷன்ஷிப் தான் இங்கயும் நடந்துருக்கு என்கிறார் வலைப்பேச்சு அந்தனன்.

தனுஷூக்கு நெருக்கமானவர்களும் சொல்லிக் கொள்கிறார்களாம். குழந்தைகளும் இரண்டு பேரின் வீடுகளுக்கும் போய் வருகிறார்கள். அவர்களுக்கு அப்பா, அம்மா பிரிந்து போன மாதிரி எண்ணமே எதுவும் தெரியவில்லையாம். அவங்க ரொம்ப இயல்பா சுதந்திரமா இருக்காங்க. இவங்க ஏன் விவாகரத்து வரை போனாங்கங்கறதுக்கு பதிலே இல்லையாம்.

தனுஷ் ரஜினியை அப்பான்னு தான் அழைப்பாராம். அதே போல லதாவை அம்மா என்று தான் அழைப்பாராம். லதாவை அவரது அம்மாவை விட உயர்ந்த ஸ்தானத்தில் தனுஷ் வைத்துள்ளாராம். அவர்களிடம் மணிக்கணக்கில் கூட பேசுவாராம். தனது இன்ப, துன்பங்கள், எதிர்கால கடமைகள் எல்லாவற்றையும் அவரிடம் பேசிக்கொள்வாராம் தனுஷ்.

இதையும் படிங்க… மிட் நைட்டில் சிம்பு பார்த்த வேலை!.. பதறிய நடிகர்!.. தியேட்டர்ல நடந்ததுதான் ஹைலைட்!…

அப்படிப்பட்ட நிலையில், எப்படி ரஜினி குடும்பம் கடுமையாகப் பேசும் என்ற கேள்வி எழுகிறது. ரஜினி அளவு சொத்து இல்லை என்றாலும், அவரும் வேகமாக வளர்ந்து வருகிறார் என்றே சொல்ல வேண்டும். ரஜினி வானம் என்றால் இவர் மேகம். தனுஷை இப்போது வரை ரஜினி குடும்பம் நேசித்துக் கொண்டு தான் இருக்கிறதாம்.

இப்போதைய சூழலில் ஒருவரது விஷயத்தில் இன்னொருவர் தலையிட வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார்களாம். வெளியில் விவாகரத்து என்று சொன்னாலும் அவர்களுக்குள் இருக்கிற நட்பு, அன்னியோன்யம், உறவு என எதுவுமே மாறவில்லையாம். எதிர்காலத்தில் இருவரும் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் கூட நிகழலாம் என்கிறார் வலைப்பேச்சு அந்தனன்.

google news
Continue Reading

More in Cinema News

To Top