விஜய்யை தட்டித் தூக்கிய சிவகார்த்திகேயன்.. அமெரிக்காவிலும் மாஸ்!

by adminram |   ( Updated:2021-10-18 13:32:50  )
vijay sivakarthikeyan
X

தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக வலம்வருபவர் நடிகர் விஜய். ரசிகர்களால் செல்லமாக இவர் தளபதி என அழைக்கப்படுகிறார். சமீபகாலமாக இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் மெகா ஹிட் ஆவதுடன் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இதன் காரணமாகவே இவரைத்தேடி பல தயாரிப்பாளர்கள் வருகின்றனர்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் மாஸ்டர். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நல்ல வசூல் அள்ளியது. கொரோனா முதல் அலைக்குப் பின் 50% இறக்கைகளுடன் தியரங்கில் பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்பட்டது.

doctor movie

doctor movie

அப்போது வெளியான மாஸ்டர் படம் 100 கோடிக்கும் மேல் வசூலித்தது.இப்படம் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல கலெக்சன் பெற்றது. தற்போது விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 'பீஸ்ட்' என்கிற புதிய படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் கலெக்சனில் விஜய் - அஜித்துக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் சிவகார்த்திகேயன் என்றே கூறலாம். அந்த அளவிற்கு இவர் நடிக்கும் படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதுடன் வசூலிலும் கலக்கி வருகின்றது.

இதையும் படிங்க: துடைப்பக்கட்ட… ஷிவானியை ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!

அந்தவகையில் கடந்தவாரம் இவர் நடிப்பில் வெளியான புதிய படம் 'டாக்டர்'. இப்படத்தையும் நெல்சன் திலீப் குமார்தான் இயக்கியுள்ளார். வெளியான நாள்முதல் நல்ல விமர்சனங்களைப் பெற்றதுடன் வசூலிலும் கோடிகளை அள்ளிவருகிறது.

50 கோடியைத் தாண்டி வசூலித்துள்ள இப்படம் விரைவில் 100 கோடியை தொடும் என கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் இப்படம் $440K வசூல் செய்துள்ளதாம். ஆனால், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் $439K தான் வசூலித்துள்ளதாம்.

என்னதான் ரஜினியை விஜய் முந்திவிட்டார் என கூறினாலும், இந்த செய்தி மூலம் விஜய்யை சிவகார்த்திகேயன் முந்திவிட்டார் என்றே தெரிகிறது.

Next Story