Cinema History
சிவாஜி – பத்மினி இடையே இருந்த காதல்!.. கல்யாணத்திற்கு தடையாக இருந்த அந்த காரணம்!..
ஒரு நடிகர் பல நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்தாலும் ஒரு நடிகையுடன் அவருக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆவது போல எல்லோரிடமும் இருக்காது. கெமிஸ்ட்ரி மட்டுமல்ல ரசிகர்களும் அந்த நடிகர் ஒரு குறிப்பிட்ட ஜோடியுடன் நடிப்பதையே விரும்புவார்கள். ஏனெனில் இவருக்கு இவர்தான் பொருத்தமாக இருப்பார் என்கிற எண்ணம்தான் அதற்கு காரணம். எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுடன் நிறைய படங்களில் நடித்தாலும் சரோஜாதேவிதான் அவருக்கு பொருத்தமான ஜோடி என பலரும் சொல்லுவார்கள். அதனால்தான் ஜெயலலிதாவை விட எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி அதிக படங்களில் நடித்தார்.
அதேபோல், நடிகர் சிவாஜி தேவிகா, கே.ஆர்.விஜயா என பல நடிகைகளுடன் நடித்தாலும் அவருக்கு பொருத்தமான ஜோடியாக ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டவர் பத்மினிதான். அவருடன் பல திரைப்படங்களில் சிவாஜி நடித்துள்ளார். நாட்டிய போரொளி என ரசிகர்களால் ரசிக்கப்பட்டவர். உத்தம புத்திரன், அன்பு, இரு மலர்கள், மங்கையர் மாணிக்கம், குலமா குணமா, தங்கப் புதுமை, பேசும் தெய்வம், தெய்வப்பிறவி, திருமாள் பெருமை, மரகதம், இருவர் உள்ளம், வியட்நாம் வீடு உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிவாஜியும் பத்மினியும் இணைந்து நடித்தனர்.
இதையும் படிங்க: சிவாஜியை கலாய்த்து பாடல் எழுதிய வாலி!.. கோபத்தின் உச்சிக்கே போன எம்.ஜி.ஆர்..
திருமணமான பின்னரும் சிவாஜியுடன் அவர் ஜோடி போட்டு நடித்த ‘தில்லானா மோகானாம்பாள்’ திரைப்படம் இப்போது வரை ஒரு கிளாசிக் படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பலபடங்களில் இருவரும் ஜோடி போட்டு நடித்தபோது சிவாஜிக்கும் பத்மினிக்கும் இடையே காதல் இருந்ததாக அப்போதிருந்த பத்திரிக்கைகள் எழுதின.
இந்நிலையில், சினிமா துறைக்கு வெளியே நடிகர், நடிகர்களின் பல விசயங்கள் பற்றி தெரிந்து வைத்திருக்கும் டாக்டர் காந்தராஜ் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘சிவாஜிக்கும், பத்மினிக்கும் இடையே காதல் இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. பத்மினி அமெரிக்காவில் செட்டில் ஆன பின் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் பத்மினியிடம் ‘சிவாஜியை நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?’ என கேட்டாராம்.
அதற்கு உடனே பதில் சொல்லாத பத்மினி அரைமணி நேரம் கழித்து ‘அவர் வேறு ஜாதி.. நான் வேறு ஜாதி. எப்படி எங்கள் திருமணம் நடக்கும்?’ என கேட்டுள்ளார். அப்படியெனில், இருவருக்கும் இடையே அந்த எண்ணம் இருந்திக்க வாய்ப்புண்டு. இருவரும் ஆசைப்பட்டிருக்கலாம் ஆனால், நடக்காமல் போயிருக்க வாய்ப்புண்டு. மேலும், பத்மினி சினிமாவில் சம்பாதிப்பதை அவரின் குடும்பம் விரும்பியது. எனவேதான் சிவாஜியை திருமணம் செய்து கொள்ள அவர்கள் சம்மதிக்கமால் போயிருக்கலாம்’ என காந்தராஜ் அதில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: யார் சிறந்த நடிகர்!. சிண்டு மூட்டிவிட்ட பத்திரிக்கை!. எம்.ஜி.ஆரும் – சிவாஜியும் என்ன பண்ணாங்க தெரியுமா?!..